சர்ச்சையாகவும், காமெடியாகவும் பேசிவதில் புகழ் பெற்றவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பேச்சில் மட்டுமல்ல, சிறுவனை, தனது காலணிகளை எடுக்கச் சொல்லி செயலிலும் சர்ச்சையில் சிக்கியவர். தற்போது அரசு விழாவில் அவர் பேசிய பேச்சு, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட கணவாய்பட்டி, முளையூர் பகுதிகளில் நேற்று, மினி கிளினிக்குகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Also Read: `அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுங்க!' - காவல்நிலையத்தில் புகாரளித்த சிறுவன்
அதற்காக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் நத்தம் பகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர். உடன், சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``எந்தத் திட்டங்களைச் செய்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார். ரூ.2,500 ஒவ்வொரு வீட்டுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கிறோம். கூடவே வேட்டி, சேலை கொடுக்கிறோம். மொத்த மதிப்பு ரூ.3000. இதனை ஏமாற்று வேலை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
Also Read: `பூட்டப்பட்ட அறை; 2 மணிநேர பேச்சுவார்த்தை!' -திண்டுக்கல் சீனிவாசன் சமரசத்தால் கொதித்த பழங்குடிகள்
மாமியார் உடைத்தால் மண் குடம், மருகமள் உடைத்தால் பொன்குடம் என்பதுபோல உள்ளது. தி.மு.க ஆட்சியில், அவங்க அப்பா இதெல்லாம் செய்திருந்தால், புத்தர் வாரிசு, இயேசுநாதர் வாரிசு என்பார்கள். நாங்கள் செய்திருந்தால், இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி... எது செஞ்சாலும் தப்பு. `நன்மை செய்வோம்’னு சொல்லிதான் ஓட்டுக் கேட்டு வந்திருக்கோம்” என்றார்.
`இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு’ என அமைச்சர் பேசியதும், மேடையில் அமர்ந்திருந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/minister-dindigul-seenivasan-speech-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக