ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டும் அவிழ்த்து விடவேண்டும். கலப்பின மாடுகளை அனுமதிக்கக்கூடாது என்று ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதை வலியுறுத்தி நேற்று எருமை மாட்டுடன் வந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா கட்டுப்பாடு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு பொங்கலுக்கு அலங்காநல்லூர் உட்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற கவலையுடன் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கவலையுடன் இருந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்கவேண்டும், கலப்பின மாடுகளை அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இதுபற்றி நம்மிடம் பேசிய பிரபல மாடுபிடி வீரர் ரஞ்சித், "நாட்டு மாடுகளை அழிப்பதற்காக சிலர் கலப்பின மாடுகளை ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடுகின்றனர். இதை கால்நடைத் துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.
இதைத் தடுக்கவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் 600 மாடுகளை அவிழ்த்து விடத்தான் நேரம் உள்ளபோது, 1200 மாடுகளுக்கு டோக்கன் வழங்குகிறார்கள். இதுபோன்ற புகார்களை மாவட்ட நிர்வாகம் சரி செய்யவேண்டும்" என்றார்.
தொடர்ந்து நாட்டு மாடுகளின் சிறப்புகளை பள்ளி பாடத்தில் வைக்கவேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டும், ஜல்லிக்கட்டில் கார்பரேட் நிறுவனங்களின் கலப்பின மாடுகளை அனுமதிக்கக் கூடாது'' போன்ற கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
source https://www.vikatan.com/news/agriculture/players-opposing-to-include-exotic-breed-bulls-in-upcoming-2021-jallikattu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக