Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

ஆடை, அலங்கார, ஆபரண வடிவமைப்பு படிப்பு... #NIFT2021 விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்னென்ன?

ஆடை, அலங்கார வடிவமைப்பு தொடர்பான பல்வேறு கல்வியையும் தொழில்நுட்பத்தையும் முறையாக கற்பிக்கும் நடுவன் அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழே இயங்கி வரும் 'NIFT' பெங்களூரு, போபால், காந்திநகர் ஹைதராபாத், புவனேஸ்வர், சென்னை, ஜோத்பூர், கங்ரா, கண்ணூர், கொல்கத்தா, பாட்னா, ரேபரேலி, மும்பை, புதுடெல்லி, ஷில்லாங், ஸ்ரீநகர் என்ற 16 வளாகங்களில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம், ஆடை, அணிகலன்கள், தோல் பொருட்கள், செய்தித் தொடர்பு வடிவமைப்பு தொழில்நுட்பம் என்ற பல்வேறு துறைகளில் 10 வகையான இளநிலை, முதுநிலை, முனைவர் படிப்புகளை இன்றைய தேவைகளுக்கேற்ப தற்கால மற்றும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து கல்வியையும் தொழில்நுட்பத்தையும் தருகிறது.

NIFT – படிப்புகள்

இளநிலை வடிவமைப்பு (Bachelor of Design) – B. Des - 4 ஆண்டுகள்

AD - Accessory Design

FC - Fashion Communication

FD - Fashion Design

KD - Knitwear Design

LD - Leather Design

TD - Textile Design

இளநிலை வடிவமைப்பு தொழில்நுட்பம் ( 4 ஆண்டுகள்)

B. Tech - Bachelor of Fashion Technology

F.Tech - Fashion Technology – Apparel production

முதுநிலை படிப்புகள் (Post Graduation Courses)

M. Des - Master of Design

M.FM - Master of Fashion Management

M.F.Tech - Master of Fashion Technology

நுழைவுத்தேர்வு

இப்படிக்குத் தகுதியான மாணவர்களை அகில இந்திய நுழைவுத் தேர்வு நுழைவுத்தேர்வில் வழியாக தேர்வு செய்கிறது.

B. Des படிப்பிற்கு எழுத வேண்டிய தேர்வுகள்:

Creative Ability Test - CAT

General Ability Test - GAT

CAT, GAT என்ற இந்த இரண்டு தேர்வுகளில் தேர்ச்சிக்குப்பின் Situation Test (ST) என்ற தேர்வை எழுத வேண்டும்.

B.F.Tech படிப்பிற்கு எழுத வேண்டிய தேர்வுகள்

General Ability Test (GAT)

M. Des படிப்பிற்கு எழுத வேண்டிய தேர்வுகள்

Creative Ability Test - CAT

General Ability Test - GAT

CAT, GAT என்ற இந்த இரண்டு தேர்வுகளுக்கு பின், Group Discussion, Personal Interview என்ற இரண்டு நேர்முகத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

M.F.M, M.F.Tech என்ற முதுநிலை படிப்புகளை முயற்சிக்கும் மாணவர்களும் இத்தேர்வு கலைத்தான் எழுத வேண்டும்.

தேர்வுகள் அனைத்துமே மாணவர்களின் நுண்ணறிவுத் திறன் பொதுத் திறன் இவற்றை சோதித்து அறியும் வகையில் அமையும்.

மதிப்பெண்கள்

B. Des : CAT : 50% GAT : 30% ST 20%

M.Des : CAT : 40% GAT : 30% GD/PI :30%

BFT GAT : 100%

MFT GAT : 70% GD / PI : 30%

MFM GAT : 70% GD / PI : 30%

பாடத்திட்டம்

பாடத்திட்டம்
பாடத்திட்டம்

என்றவாறு 150 வினாக்கள் கேட்கப்படும். பொதுவாக குவான்டிடேட்டிவ் எபிலிட்டி என்ற பிரிவுகளில், கூட்டல், பெருக்கல்,வகுத்தல், கழித்தல், பின்னங்கள், வட்டி வீதம், விகிதம் நேரம், தூரம் இவற்றிலிருந்து கணக்குகள் கேட்கப்படும்.

நேர்முகத்தேர்வில் கேரியர் ஒரியண்டேஷன், படிப்பிற்கேற்ற நடைமுறைகள், சாதனைகள், தனித் திறன்கள், இதரத் திறன்கள், செய்தித் தொடர்பு திறன், பொது அறிவு, நுண்ணறிவு, ஆக்கப்பூர்வ சிந்தனை என இவை சோதிக்கப்படும்.

B.Des, B.F. Tech படிப்பிற்கு ஸ்கோர் படிப்பிற்கு SAT ஸ்கோர், M.F.M படிப்பிற்கு GMAT ஸ்கோர், M.Des, M.F.Tech படிப்பிற்கு GRE ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்க தகுதி

இளநிலை படிப்பு

B.Des, B.F.Tech இளநிலை படிப்புகளுக்கு, உச்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 23 க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

B. Des படிப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பில் ஏதேனும் ஒரு குழு எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B. F. Tech படித்திருக்க பன்னிரண்டா வகுப்பில் இயற்பியல் கணிதம் வேதியியல் உள்ள புழுவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கில செய்தி தொடர்பில் நேர்ப்பதம், எதிர்ப்பதம், சொற்கள் இவற்றின் பொருள்கள், ஒருமை, பன்மை, ஒரு சொல் பிரதியீடு, இடியம், ஸ்பெல்லிங் , கம்பிரிஹென்ஷன் இவை இடம் பெறும் .

அனாலிடிகல் லாஜிக்கல் எபிலிட்டி , பிரிவுகளில் கணக்குகளை புரிந்து தீர்த்தல், காரணம் மற்றும் விளைவுகள், கோட்பாடுகள், இணை சிந்தனைகள், இவை இடம் பெறும்.

பொதுஅறிவு, தற்கால நிகழ்வுகள் பிரிவுகள் அனைத்தும் தரப்புகளில் இருந்தும் தலைப்புகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.

கேஸ் ஸ்டடி (Case Study) என்ற பிரிவில் தொழிலக சூழலில், மாணவர்கள் மேலாண்மை தொடர்பான அறிவுத்திறன் சோதிக்கப்படும்.

இளநிலை B.Des, படிப்பிற்கான Situation Test - கொடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு மாணவர்களின் வடிவமைப்பு மேம்பாடு திறன் சோதிக்கப்படும்.

15 அல்லது 20 மணித்துளிகள்நடைபெறும்கலந்துரையாடல், கோட்பாடுகள், புரிந்துகொள்ளும்திறன், தலைப்பு, அறிவுசார் அறிவு, தொடர்புதிறன், புதுகருத்துக்களை கோட்பாடுகளை உருவாக்குதல், கணக்குகளைத் தீர்த்தல், தலைமைப் பண்புகள், செய்தித்தொடர்பு, இவை சோதிக்கப்படும்.

முதுநிலைப் படிப்பு

படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை.

M.Des படிப்புகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் படிப்போ, NIFT, NID வழியாக மூன்றாண்டு இளநிலை, டிப்ளமோ படிப்போ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

M.F.Tech படிக்க, NIFT வழியாக B.F.Tech படிப்பு அல்லது B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

M.F.M படிப்பிற்கு இதே படிப்பில் இளநிலை முடித்திருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

www.nift.ac.in அல்லது

http://admission.net.nift என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினர், ரூ.2000/ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாற்றுத் திறனாளிகள் ரூ.1000/- செலுத்த வேண்டும்.

14.12.2020 முதல் 21.1.2021 வரை விண்ணப்பிக்கலாம் ரூ.5000 கட்டணத்துடன் 24.1.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுகள் 14.02.2021 அன்று நடைபெறும்.



source https://www.vikatan.com/news/career/how-to-apply-for-nift-2021-courses-online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக