Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மாமல்லபுரம் வரை ஒரு குட்டி பைக் ரைடு... VLOG Mahabalipuram #MVRiders

ஒரு குட்டி பைக் ரைடு சென்று வந்தோம். பைக்குகள்: பஜாஜ் பல்சர் Bajaj Pulsar #AS200 மற்றும் ராயல் என்ஃபீல்டு Royal Enfield ஹிமாலயன். வேறெங்கும் இல்லை... சென்னையிலிருந்து உலகப் புகழ் பெற்ற மாமல்லபுரம் சுற்றுலாத் தலம் வரைதான். காலை 7 மணிக்கு கிண்டியில் இருந்து ஆரம்பித்து, கோவளம் கடற்கரையில் சில நிமிடம், பின் மாமல்லபுரம் சென்று யூ டர்ன் அடித்து வீடு திரும்பினோம்.

கடந்த ஆறு மாத காலம் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த நேரத்தில் என்றோ நாம் செய்த பயணங்களின் நினைவுகள் சற்று நிம்மதியைத் தந்தாலும், ஏக்கத்தை ஏற்றிவிட்டது. மீண்டும் நீண்ட தூரப் பயணங்கள் செல்வதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் எடுக்குமோ என்ற கேள்வியும், அதேசமயம் அப்படிச் சென்றால் உடல்நலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் அனைவரிடமும் இருக்கிறது. காரணம் கொரோனா. அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் மக்கள் ஆகிய அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். கொரோனாவுடன் வாழ ஆரம்பித்து விடலாம் என்ற எண்ணம் வருவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதே சிறந்தது. முகக் கவசம், சமூக இடைவெளி, சுத்தம், சுகாதாரம் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் உடல்நலத்தின் மீது அக்கறை இக்காலகட்டத்தில் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறையாகவே மாற வேண்டும். நல் உடல்நலத்துடன் வாழ்வோம், அனைவரையும் வாழ வைப்போம். வெல்வோம் கொரோனாவை!

#MotorVikatan #UlagamSutralamVanga #StaySafe #BeHealthy #StayStrong Mahabalipuram | *Please use headphones for better experience. Audio quality is slightly disturbed due to wind noise. We will improve the audio quality in upcoming VLOGS.



source https://www.vikatan.com/automobile/motor/a-short-ride-from-chennai-to-mahabalipuram-vlog-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக