Ad

புதன், 30 டிசம்பர், 2020

`இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா!’ - 25 ஆக அதிகரித்த மொத்த பாதிப்பு #NowAtVikatan

மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்!

உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ், பழைய கொரோனா வைரஸை விட மிகவும் வேகமாக பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதால், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்பட பல நாடுகள் தடை செய்தன.

கொரோனா வைரஸ்

தொடர்ந்து, சமீப காலத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் சோதனைகள் நடைபெற்றது. இதில் இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தனி அறையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உருமாறிய கொரோனா இந்தியாவில் மேலும் 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 25ஆக உயர்ந்துள்ளது, தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/31-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக