Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

மனக்குறைகளை நீக்கும் மகா ருத்ராட்ச அபிஷேகம்... நீங்களும் பங்கு பெறலாம்!

சிவ பக்தர்களின் புனித அடையாளமாக விளங்குவது ருத்ராட்சம். ஈசன் தாண்டவ மூர்த்தியாக எங்கெல்லாம் திருநடனம் புரிந்தாரோ அங்கெல்லாம் ருத்ராட்ச விருக்ஷங்கள் தோன்றின என்பது புராணம் சொல்லும் தகவல். ஈசனின் திருவருளால் ருத்ர அம்சமாகத் தோன்றிய ருத்ராட்சம் அற்புதமானப் பலன்களை அளிக்கவல்லது. ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவர்களுக்கு துன்பமோ, துயரமோ, அச்சங்களோ அணுகாது என்பர். அவர்களுக்கு பிறவிப் பிணியும் கால பயமும் இல்லவே இல்லை என்கின்றன ஆன்மிக நூல்கள்.

திருநீறும், ருத்ராட்சமும் அளிக்கும் மோட்சப் பேறை வேறெந்த செல்வமும் அளிக்காது என்கின்றன ஆகமங்கள். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர் குளிக்கும் போது, ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் மீது வழியும் நீர் கங்கைக்குச் சமமானது என்பர். இதனால் ஒவ்வொரு நாளும் அடியார்கள் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். அதுமட்டுமா, உடலில் சேரும் பல்வேறு விதமான நோய்க் கிருமிகளை அழிக்க வல்லதாக ருத்ராட்சம் உள்ளது. மன அழுத்தம், சர்க்கரை குறைபாடு, இதய நோய்கள், வலிப்பு நோய்கள் என பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியாகவும் ருத்ராட்சம் விளங்குகிறது.

ருத்ராட்சம்

சிவனடியார்கள் பலர் ருத்ராட்சத்துக்கு அபிஷேகம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதாவது ருத்ராட்சத்துக்கு பால், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேகிப்பார்கள். இது உங்களை ஆயிரம் ஆண்டுகள் சிவலோகத்தில் வைத்திருக்கும் உயர்ந்த உன்னத வழிபாடு என்பார்கள். இதைவிடவும் உயர்ந்த வழிபாடு ஒன்று உண்டு. அதுதான் ருத்ராட்சங்களைக் கொண்டு ஈசனை (லிங்கத் திருமேனியை) அபிஷேகிப்பது. இந்த வழிபட்டால் சிவசொரூபத்தின் அருகேயே கோடி ஆண்டுகள் உங்கள் ஆன்மாவை வைத்திருக்கும் என்கின்றன ஆகமங்கள். அதனால் அபிஷேகங்களில் உயர்ந்தது ருத்ராட்ச அபிஷேகம் எனலாம். 108 முறை மகா ருத்ர அபிஷேகம் செய்யும் பலனையும், பல கோடி முறை செய்யும் ருத்ர ஜப பலனையும் ஒருங்கே அளிக்க வல்லது ருத்ராட்ச அபிஷேகம். ஈசனுக்கு ருத்ராட்ச அபிஷேகம் செய்தால் மன நிம்மதி கிடைக் கும், வேண்டிய அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். அதேநேரம், ருத்ராட்ச அபிஷேகத்தை வீடுகளில் செய்யக் கூடாது என்பதும் உண்மை. அற்புதமான இந்த அபிஷேகத்தை ஆலயங்களுக்குச் சென்றுதான் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஆகமங்கள்.

தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், திருமணத் தடையால் அவதிப்படுவோர், காரியத் தடைகளால் வருந்தித் தவிக்கும் அன்பர்கள், கடும் பிணிகளால் வருந்துவோர், தொடர்ந்து தோல்விகளால் துவண்டவர்கள், ஏழ்மை - கடன் பிரச்னைகளால் வருந்துவோர், நிலையான வருமானமின்றி துக்கப்படுவோர் போன்றவர்கள் ருத்ராட்ச அபிஷேகத்தை தரிசிப்பதும் அபிஷேக ருத்ராட்சத்தைப் பெற்று பூஜிப்பதும் சிறந்த பலன்களை அளிக்கும். அதுவும் குறிப்பாக தேவர்களின் வைகறைப்பொழுதான - வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மார்கழியில் சிவபெருமானுக்கு ருத்ராட்ச அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம் எனலாம். எனவே வாசகர்களாகிய உங்களின் எல்லா துன்பங்களும் நீங்கி சகல சுபிட்சங்களும் கிடைக்கவேண்டி பிரமாண்டமான ருத்ராட்ச அபிஷேகம் நடைபெறவுள்ளது.

ருத்ராட்ச அபிஷேகம்

வரும் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணி முதல், வாசகர்களுக்கான பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து உரிய சங்கல்பத்துடன் ஈசனுக்கு மகா ருத்ராட்ச அபிஷேக ஆராதனை நிகழவுள்ளது. கயிலாய வாத்தியக் கச்சேரியும், திருமுறைகள் முற்றோதலும் நடைபெறும். முன்பதிவு மூலம் மகா ருத்ராட்ச அபிஷேக வைபவத்துக்குச் சங்கல்பிக்கும் வாசகர்களுக்குச் சிவபிரசாதமாக, அபிஷேகித்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம் அனுப்பிவைக்கப்படும். இது உங்கள் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நிச்சயமாய் நம்பலாம்.

நடைபெறும் திருத்தலம் - கத்தாரிகுப்பம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ளது கத்தாரிகுப்பம். பாடல் பெற்ற திருவல்லம் திருத்தலத்துக்கு அருகில் உள்ளது.

நீங்களும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் தகவல்களுக்கு: 7397430999 / 89390 30246



source https://www.vikatan.com/spiritual/functions/lord-sivas-rudraksha-abhishekam-to-be-conducted-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக