Ad

வியாழன், 30 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு; சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!

பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே,பி.முனுசாமி ஆகியோர் அறிவித்தனர். மேலும், நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதிமுக பொதுக்குழு

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, ``ஜூலை 11-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மனுவை 4-ம் தேதி விசாரிக்க ஒப்புதல் வழங்குகிறோம்'' எனத் தெரிவித்திருக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-high-court-refused-to-ban-admk-general-body-on-july-11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக