Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

கோவையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம்! #PhotoAlbum

பா.ஜ.க தொண்டர்கள்
கட் அவுட்
பா.ஜ.க, பொதுகூட்டம்
பா.ஜ.க, பொதுகூட்டம்
பா.ஜ.க, பொதுகூட்டம்
மோடி
பேனர்கள்


source https://www.vikatan.com/government-and-politics/election/narendra-modi-addressed-election-campaign-in-coimbatore

EXCLUSIVE: `Celebrity போல Makeup போடுவது எப்படி?'- Sri Reddy Makeup Tutorial in Tamil | Say Swag



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-sri-reddy-makeup-tutorial-in-tamil

``அஞ்சு வருஷமா அலையுறோம்... வேலை கிடைக்கல..!'' - தவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

புதுக்கோட்டை, இணை இயக்குநர் அலுவலகத்தில் அம்மா மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக, ஒரு கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. அந்தக் கூட்டத்துக்கு இடையே கம்பு ஒன்றை ஊன்றியவாறு, சிரமத்துடன் மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தார் மாற்றுத்திறனாளி சித்ரா தேவி. அங்கு நின்ற ஒருவர், ``இது மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இல்லம்மா, அம்மா மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறாங்கம்மா" என்றார்.

``தெரியுமுங்க, தெரிஞ்சுதான் வந்திருக்கேன்" என்று கூறியவர் மாடிப்படி ஏறி வரிசையின் கடைசியில் போய் நின்றார். அவரை பின்தொடர்ந்து, கையால் காலைத் தாங்கியபடி மெல்ல, மெல்ல படியில் ஏறிவந்தார் மாற்றுத்திறனாளியான அவரின் கணவர் ரமேஷ்.

சித்ரா தேவியும் ரமேஷும் மாற்றுத்திறனாளி தம்பதி. சித்ரா தேவியின் அருகே சென்ற ரமேஷ், தன் கையில் வைத்திருந்த சான்றிதழ்களை அவருடைய கையில் கொடுத்து, `கண்டிப்பா இந்த முறை வேலை கிடைச்சிடும்' என்று கூறி, சோர்ந்து போயிருந்த சித்ரா தேவிக்கு நம்பிக்கையூட்டினார்.

எம்.காம், டேலி (Tally) படித்திருக்கும் சித்ரா தேவி பல்வேறு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தும் இதுவரையிலும் வேலை கிடைக்கவில்லை. வறுமையில் தவித்தாலும் மனம் தளராத சித்ரா தேவி, என்றாவது ஒரு நாள் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், மாற்றுத்திறனாளி கணவரின் துணையுடன் வேலைக்காகத் தினமும் ஒவ்வோர் அலுவலகமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்.

அம்மா மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த சித்ரா தேவியிடம் பேசினோம்.

``நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் புதுக்கோட்டை பக்கத்துல பெருமாநாடு. கட்டிக்கிட்டுப்போனது இலுப்பூர் பக்கத்துல வீரப்பட்டி. ஒரு வயசு இருக்கும்போதே போலியோ பாதிச்சு, வலது கால் செயலிழந்து போச்சு. ஆரம்பத்துல எல்லாத்துக்கும் அம்மாதான் தூக்கிக்கிட்டு போவாங்க.

அதுக்கப்புறம் கொஞ்சம், கொஞ்சம் தவழ்ந்து என்னோட வேலைகளை நானே பண்ணிக்கிட்டேன். எட்டாவது வரைக்கும் கிராமத்துலேயே படிச்சேன். அதுக்கப்புறம் படிக்க புதுக்கோட்டை போயிட்டு வரணும்ங்கிற சூழ்நிலை வந்திருச்சு. பஸ்லதான் போயிட்டு வரணும்.

நடக்கவே முடியாத புள்ளைய ஸ்கூலுக்கு எல்லாம் அனுப்ப வேண்டாம்னு சொந்தக்காரங்க அம்மாகிட்ட சொல்லிட்டாங்க. எனக்கு படிப்பு மேல ஆர்வம். அதனால, நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல படிக்கணும்னு வைராக்கியமா இருந்தேன். கிட்டத்தட்ட நாலு வருஷம் கஷ்டப்பட்டாலும், நெனச்ச மாதிரி ப்ளஸ் டூ வரை முடிச்சு நல்ல மார்க் எடுத்தேன். ஒரு பக்கம் பணப் பிரச்னை, மறுபக்கம் தீடீர்னு எனக்கு உடல்நிலை சரியில்லாம போக, கல்லூரியில படிக்க முடியாம போச்சு. வீட்டுலேயே முடங்கிக் கிடந்தேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம், வீட்டுக்குப் பக்கத்துலேயே ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில டீச்சர் வேலை இருக்கிறதா தோழி சொல்ல, ஆர்வமா பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க ஸ்கூலுக்குக் கிளம்பினேன்.

கிட்டத்தட்ட 12 வருஷம் அங்க பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன். அந்த ஸ்கூல் நிர்வாகம் எனக்கு ரொம்பவே ஊக்கம் கொடுத்தாங்க. அந்த ஸ்கூல்ல வேலை பார்க்கும்போதே மேற்படிப்பு ஆசையை நிறைவேற்றிக்கிட்டேன். கரஸ்ல மொதல்ல பி.காம் படிச்சேன். அதுக்கப்புறம் எம்.காம் முடிச்சேன். எம்.காம் முடிச்சிட்டு டேலி படிச்சேன்.

எப்படியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சுப்புடணும்னு அம்மாவுக்கு ஆசை. கல்யாணம் வேணாம்னுதான் நான் நெனச்சேன். அம்மா, அப்பா சந்தோஷத்துக்காக ஒத்துக்கிட்டேன். அவரும் மாற்றுத்திறனாளிதான்னு சொன்னாங்க. ரெண்டு
பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்க முடியும்னு ஓகே சொல்லிட்டேன். 2015-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கஷ்டம் இருந்தாலும், கணவர் நல்லாவே பார்த்துக்கிறாரு.

எங்களுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க இருக்காங்க. திருமணத்துக்கு அப்புறம் ஸ்கூல் வேலையிலிருந்து நிற்க வேண்டிய சூழல் உண்டாச்சு. ரெண்டு பேருக்கும் கிடைக்கிற 1,000 ரூபாய் உதவித்தொகையை வெச்சுதான் வாழ்க்கைய நகர்த்துறோம். பிள்ளைங்க பிறந்ததுக்கு அப்புறம் தேவைகள் அதிகமாகிருச்சு. உதவித் தொகையை மட்டும் வெச்சு குடும்பத்தை ஓட்ட முடியாத நிலை. பெத்தவங்களை நம்பியே எத்தனை நாள் இருக்கிறது? எங்கள்ல யாராவது ஒருத்தர் சம்பாதிச்சே ஆகணும்ங்கிற கட்டாயம் வந்திருச்சு.

அவரு எட்டாம் வகுப்புதான் படிச்சிருக்காரு. நான் டிகிரி வரைக்கும் படிச்சிருக்கேன். படிச்ச படிப்புக்கு ஒரு அரசு வேலை கிடைச்சா போதும். பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துடலாம்னு சத்துணவு வேலை, ரேஷன் கடை, சேல்ஸ்மேன் வேலை, கால்நடை ஆய்வக உதவியாளர் வேலைன்னு எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பிச்சேன். எந்த வேலையும் கிடைக்கல.

அரசு வேலைதான்னு இல்ல, தனியார் வேலையும்கூட கிடைக்கல. இதுக்கிடையில குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு குரூப் 2, குரூப் 4 எக்ஸாமும் எழுதினேன். ஆனாலும் பலனில்ல.

முன்னாடியாவது, சின்னச் சின்ன வேலைகளை செஞ்சு வீட்டுக்காரரு கொஞ்சம் பணம் கொடுப்பாரு. கொரோனாவுக்கு அப்புறம் அதுவும் சுத்தமா இல்லாம போச்சு. சாப்பாட்டுக்கே சிரமம். அந்த நேரத்துலதான், பக்கத்துல பனியன் கம்பெனி வேலைக்குப் போனேன். பனியன் மடிக்கிற வேலைதான். உழைக்கணும்னு ஆசை இருக்கு. ஆனாலும், தொடர்ச்சியா ஒரே இடத்துல இருந்து அந்த வேலையைப் பார்க்க உடம்பு ஒத்துழைக்கல. ரெண்டு மாசம் பல்லை கடிச்சிட்டு வேலைக்குப் போய் பார்த்தேன். அதுக்கப்புறம் முடியல.

கடினமான வேலையும் பார்க்க முடியல, படிச்ச படிப்புக்கும் வேலை இல்ல. சின்னதா ஒரு பெட்டிக்கடை வெச்சு பிழைக்கலாம்னு மானியத்துல ஒரு லட்சம் லோனுக்கு மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலகத்துக்கு ஏறி இறங்கி 15 லெட்டர் வாங்கி பேங்குல கொடுத்தேன். அந்தப் பணமும் கிடைக்கல.

நாங்க ரெண்டு பேருமே மாற்றுத்திறனாளிகளா இருந்தும், உதவித்தொகையைத் தவிர்த்து வேற எந்தச் சலுகையும் கிடைக்கல. ஒவ்வொரு முறையும் கண்டிப்பா இந்த முறை வேலை கிடைச்சிரும்னு சொல்லி வீட்டுக்காரரு கூட்டிக்கிட்டுப் போறாரு, நானும் விண்ணப்பிக்கிறேன். கடைசியில ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கு" என்று முடித்தார் வேதனையுடன்.

இந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்க்கைக்கு வழி கிடைக்குமா?



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-disabled-couple-awaits-for-the-job-for-5-years

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கிடாய் விருந்து - தி.மு.க எம்.எல்.ஏ பெரியகருப்பனை சுற்றும் சர்ச்சை!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., நாகராஜன் 15 கிடாய்கள் வெட்டி தொகுதி மக்களுக்கு விருந்து வைத்து வழிபட்டார். சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை தொகுதி, அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு போகும் வாய்ப்பிருப்பதாக கட்சிக்குள் பேசப்பட்ட நிலையில், தனக்கே மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்று கிடாய் வெட்டு நிகழ்ச்சி நடத்தினார், என விவரமறிந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவையொட்டி தான் கிடா வெட்டு நிகழ்ச்சி நடத்தினேனே தவிர சீட்டுக்காக அல்ல ,என்று நாகராஜன் அதை மறுத்தார்.

பெரியகருப்பன்

தேர்தல் நெருக்கத்தையொட்டி, சீட் கிடைக்க வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, பல கிடாய் விருந்துகள் சிவகங்கை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தி.மு.க., எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் கிடாய் விருந்து நடத்தியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. 2006, 2011, 2016 என நடைபெற்ற கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களிலும் தி.மு.க வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனே வெற்றி பெற்றிருக்கிறார்.

சிவகங்கை மாவட்ட செயலாளராக உள்ள பெரியகருப்பனுக்கு மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் சீட் கொடுக்கப்பட உள்ளது என்று உறுதியாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள 'அழகுசொக்கர்' கோயிலில், கிடாய் வெட்டி விருந்து ஒன்று நடைபெற்றிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கிடாய் விருந்தை பெரியகருப்பன் தான் நடத்தியதாக கூறப்படுகிறது.

கிடாய் விருந்தில் பெரியகருப்பன்

இது குறித்து சிங்கம்புணரி ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க.வினரிடம் பேசிய போது " தேர்தல் சமயத்தில் அண்ணன் எப்போதும் விருந்து அளிப்பார். எல்லை தெய்வங்கள் வெற்றியை கொடுக்கும் என்பது அவருக்கு நம்பிக்கை உள்ளது. சிங்கம்புணரி பகுதியில் இந்து, முஸ்லிம் ஒற்றுமை அதிகமாக இருப்பதால் இஸ்லாமிய தெய்வங்களையும் வழிபட்டார். அதனால் கந்தரி விழாவை நடத்தினார். ” என்றனர்.

இது குறித்து எம்.எல்.ஏ., பெரியகருப்பனிடம் கேட்ட போது " சிங்கம்புணரி ஒன்றியச் செயலாளர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். நான் வீட்டுக் தான் வருகிறேன் என்றேன். அவர் அழைப்பால் தான் விழாவிற்கு போனேன். நான் போகும் பல இடங்களில் கறி விருந்தும் இருக்கும், சைவமும் இருக்கும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியுமா?" என்றார்.

Also Read: தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..! உடைகிறதா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி..?

இது குறித்து சிங்கம்புணரி பகுதி காவல்நிலையத்தில் விசாரித்த போது " புதுக்கோட்டை மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட பிச்சங்காலப்பட்டி கிராமத்தில் உள்ள அழகுசொக்கர், கருப்பசாமி கோயிலில் 51 ஆடுகள் வெட்டப்பட்டு கே.ஆர்.பெரியகருப்பன் விருந்து வைத்துள்ளார். 1500 முதல் 2000 நபர்கள் விருந்தில் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட லிமிட் என்பதால் கூடுதல் தகவல் இல்லை" என்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது, கிடாய் விருந்து நடத்தியது விதிமுறை மீறல் தானே? என்று சர்ச்சை எழுந்துள்ளது.



source https://www.vikatan.com/news/politics/dmk-mla-periya-karuppan-host-kidai-virunthu-during-code-of-conduct

மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை: 14 வயதில் பிரசாரம் முதல் 2021 தேர்தல் வரை! -எப்படி செயல்படுகிறார்?

கருணாநிதிக்கு பிறகு

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, 2019-ல் வந்த தன் பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை. காரணம், அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க-வின் தலைவராக நீண்டகாலம் செயல்பட்ட கருணாநிதியின் மறைவால் தி.மு.க-வினர் பெரும் சோகத்திலும் வேதனையிலும் இருந்தனர். தந்தை என்கிற வகையில் கருணாநிதியின் மறைவு ஸ்டாலினுக்கு கூடுதலான இழப்பு.

"நம்மை ஆளாக்கி, நெறிப்படுத்தி, பொதுவாழ்வுப் பணியில் நல்வழிப்படுத்திய தலைவர் கலைஞர் நம்முடன் இல்லாத நிலையில், என் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே என் எண்ணம். பிறந்தநாள் விழா என்ற பெயரில் ஆடம்பர விழாக்கள் நடத்துவதைக் கைவிட்டு, ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்றவரை வழங்கிட வேண்டுகிறேன்” என்று அறிக்கையின் வாயிலாகத் தி.மு.க தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியிலும் கட்சியின் அமைப்பு ரீதியிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து தன் அரசியல் பாதையில் உறுதியுடன் பயணித்துவருகிறார் ஸ்டாலின். பா.ஜ.க எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் தீவிரத்தன்மையுடன் செயல்பட்டுவருகிறார்.

இளைஞரணி தலைவராக

தி.மு.க இளைஞரணி என்று சொன்னாலே அனைவர் மனதிலும் ஸ்டாலின் முகம்தான் தோன்றும். அந்தளவுக்கு நீண்ட காலமாக அந்தப் பொறுப்பை வகித்தவர் ஸ்டாலின். தற்போது அவரின் மகன் உதயநிதி அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். தி.மு.க-வுக்கு அப்பால் இருக்கும் பலர் இதை விமர்சித்தபோதிலும், தி.மு.க-வுக்குள் சிறு முணுமுணுப்புகூட இல்லை. ஆனால், தி.மு.க-வில் ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தி.மு.க-விலிருந்து விலகி ம.தி.மு.க என்ற புதிய கட்சியையே ஆரம்பித்தார் வைகோ. அந்த அளவுக்கு வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தைக் கருணாநிதி தலைமையிலான தி.மு.க எதிர்கொண்டது. கருணாநிதியின் மகன் என்பதாலேயே இந்த இடத்துக்கு ஸ்டாலின் வந்துள்ளார் என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது என்றாலும், இந்த உயரத்தை ஸ்டாலின் எட்டியதற்கு அவரது உழைப்பும் தியாகமும் முக்கியம் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.

பதினான்கு வயதில் தொடங்கிய பயணம்

1967-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஸ்டாலினுக்கு 14 வயது. அந்த வயதிலேயே தி.மு.க-வுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர் ஸ்டாலின். 1966-ம் ஆண்டு `இளைஞர் தி.மு.க கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் அவர். தி.மு.க-வுக்கு தொழிற்சங்கம், மாணவர் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் இருந்தபோதிலும், அந்தக் கட்சிக்கு நீண்ட காலமாக இளைஞர் அமைப்பு இருக்கவில்லை. 1980-ம் ஆண்டுதான் தி.மு.க இளைஞரணி உதயமானது. 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க இளைஞர் அணியைக் கருணாநிதி தொடங்கிவைத்தார். அதற்கு உடனடியாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. 1982-ம் ஆண்டு இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வானார் ஸ்டாலின்.

மிகவும் தாமதமாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றபோதிலும், தி.மு.க-வில் கூடுதலான செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் கொண்ட அமைப்பாக அன்று முதல் இன்றுவரை இருந்துவருவது இளைஞரணி மட்டும்தான். அதன் செயலாளராக நீண்ட காலம் இருந்தவர் ஸ்டாலின். 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார். அதே தொகுதியில் 1989-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதால், 5 ஆண்டுகள் முழுமையாக எம்.எல்.ஏ பதவியை அவர் வகிக்க முடியாமல் போனது.

1991-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், வெற்றிபெறவில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் வெற்றிபெற்றார். அதே ஆண்டில், சென்னை மாநகராட்சி மேயராகவும் தேர்வானார். 2003-ல் தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளராகத் தேர்வான ஸ்டாலின், 2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக அமைச்சர் பொறுப்பை ஏற்றார். உள்ளாட்சித் துறையை அவர் கவனித்தார். 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஆனார்.

மிசா நாட்கள்

பலமுறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், முதன்முறையாக 2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். 2011, 2016 ஆகிய இரண்டு முறையும் கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்வுசெய்யப்பட்டார். வயோதிகம் காரணமாகக் கருணாநிதி உடல் நலிவுற்று ஓய்வெடுத்துவந்த நிலையில், 2017-ம் ஆண்டு தி.மு.க-வின் செயல் தலைவர் ஆக்கப்பட்டார் ஸ்டாலின். 2018-ல் கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.க-வின் தலைவராக ஸ்டாலின் ஆனார். தற்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.

தற்போது 69 வயதாகும் ஸ்டாலின் தன் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டிருந்தாலும், எத்தனையோ தியாகங்களைச் செய்திருந்தாலும், மிசா கைதியாக சிறையில் அனுபவித்த கொடுமைகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

1975-ம் ஆண்டு. தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி நடைபெற்ற காலம். மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. முதல்வரின் மகனாக ஸ்டாலின் வலம்வந்துகொண்டிருந்தார். 1975-ம் ஆண்டு ஜூன் 26-ம் நாள் இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதையடுத்து, டிசம்பர் 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாட ஆயத்தமானது காவல்துறை.

சிறை செல்ல தயாராக இரு

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு போலீஸ் போனது. அங்கு ஸ்டாலின் இல்லை. வீடு முழுவதும் போலீஸார் சோதனையிட்டார்கள். ஆனால், ஸ்டாலின் இல்லை. அவர், மதுராந்தகத்தில் `முரசே முழங்கு’ என்ற நாடகத்தில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். ஆனால், தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு நாடகத்தை ரத்துசெய்துவிட்டார்கள். அன்றைய இரவு மதுராந்தகத்தில் தங்கிவிட்டு, மறுநாள் கோபாலபுரத்துக்குப் புறப்பட்டுவந்தார் ஸ்டாலின்.

வீடு திரும்பிய ஸ்டாலினைப் பார்த்து, "சிறை செல்லத் தயாராக இரு” என்றார் தந்தையும் தலைவருமான கருணாநிதி. அவரே, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைத் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு, "ஸ்டாலின் வந்துவிட்டார்” என்று தகவல் தெரிவித்தார். ஸ்டாலின் கைதாகப் போகிறார் என்ற தகவல் தி.மு.க-வினரிடையே பரவியது. தி.மு.க-வினர் கோபாலபுரத்துக்குப் படையெடுத்தனர். ஸ்டாலினை கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிய போலீஸாரால், கோபாலபுரத்தைக் கடந்துசெல்ல முடியவில்லை. அந்தளவுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஒன்பதாம் பிளாக்கில் இருந்த இரண்டாம் எண் அறைக்குள் அவர் நுழைந்தபோது, கும்மிருட்டாக இருந்தது. அங்குப் படுத்திருந்த ஒருவரின் கால்களை ஸ்டாலின் தெரியாமல் மிதித்துவிட்டார். ``யாரது?” என்று அந்த நபர் கேட்டார். ``ஸ்டாலின்” என்றார் இவர். ``தம்பி” என்று பதறியடித்து எழுந்தார் அந்த நபர். அவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. தி.மு.க., தி.க., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணித் தலைவர்களுடன் சிறை வாழ்க்கையைக் கழித்தார் ஸ்டாலின்.

அடி உதை என ஓராண்டுக் காலம் சிறையில் பல சித்ரவதைகளை அவர் அனுபவித்தார். அதைத்தான், ``மிசாவில் ஸ்டாலின் சிறை செல்லவில்லை” என்று சர்ச்சையாக்கினார் அமைச்சர் பாண்டியராஜன். ஆனால், மிசாவில்தான் ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து, அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு.

``மிசாவில் நான் ஒரு வருடம் சிறையில் அனுபவித்த கொடுமைகளையும், சித்ரவதைகளையும் நினைத்துக் கூட கவலைப்படவில்லை. இவர்களால், நான் படும் அவலங்களை நினைத்துத்தான் கவலைப்படுகிறேன்” என்ற குமுறலுடன் அந்த விமர்சனத்தைக் கடந்துபோனார் ஸ்டாலின்.

கடந்த ஆண்டு, தன் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று தி.மு.க தொண்டர்களை அறிவுறுத்திய ஸ்டாலின், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் நாம்தான் வெற்றிபெற வேண்டும் என்றும், அதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் என்றும் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமான கூட்டணி அமைக்கப்பட்டு, அந்தக் கூட்டணி 38 தொகுதிகளை வென்றது. கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில், அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் தன்னை நிரூபித்துக்காண்பித்தார் ஸ்டாலின்.

2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணி எளிதாக வெற்றிபெறும் என்ற எண்ணம் பொதுவாக அப்போது ஏற்பட்டது. ஆனால், இப்போதைய நிலை மாறியிருக்கிறது. இந்த தேர்தல் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 2019-ல் சாதித்த ஸ்டாலின், 2021-ல் சாதிப்பாரா?



source https://www.vikatan.com/news/politics/stalin-political-growth-and-challenge-he-was-going-to-face