Ad

புதன், 30 டிசம்பர், 2020

`தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் முடிவு!’ - பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டன. இதே கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட சென்னை நிகழ்ச்சியில் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதையே இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் வழிமொழிந்தநிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. பின்னர், அ.தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அக்கட்சி அறிவித்தது. அத்தோடு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடனேயே கூட்டணி எனவும் அ.தி.மு.க தலைவர்கள் பேசினர்.

அ.தி.மு.க பொதுக்கூட்டம்

கடந்த 27-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் தேர்தல் பிரசாரத் தொடக்கப் பொதுக்கூட்டத்திலும் இதையே அ.தி.மு.க அழுத்தமாகச் சொன்னது. ஆனால், கூட்டணியில் இருப்பதாகச் சொல்லும் பா.ஜ.க தலைவர்களோ வேறுவிதமாகப் பேசிவருகிறார்கள். பா.ஜ.க தேசியக் கட்சி என்பதால், அதன் முதல்வர் வேட்பாளரை தேசியத் தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் தலைவர்கள் பல தருணங்களில் குறிப்பிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க-வின் எல்.முருகன், ``பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி தொடர்கிறது’’ என்றார்.

Also Read: அ.தி.மு.க Vs பா.ஜ.க : `வேறு கூட்டணியை அமைத்துக் கொள்ளுங்கள்..’ - முதல்வர் வேட்பாளர் சர்ச்சை!

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ``தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்க முடியும். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்ற பின்னர், கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூடி முதல்வர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன்

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். கூட்டணிக் கட்சிகளுடன் நல்ல உறவு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப உரிய முடிவுகளை பா.ஜ.க-வின் நாடாளுமன்றக் குழு எடுக்கும்’’ என்று தெரிவித்தார். அப்போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.

அதிமுக - பி.ஜே.பி. கூட்டணி தொடரும்: சென்னையில் பா.ஜ.க. தலைவர் முருகன் பேட்டி. மேலும் 'தேர்தலுக்குப் பிறகே முதல்வர்...

Posted by Junior Vikatan on Tuesday, December 29, 2020


source https://www.vikatan.com/government-and-politics/politics/nda-co-ordination-committee-will-take-final-decision-about-the-cm-says-bjps-ct-ravi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக