Ad

செவ்வாய், 29 டிசம்பர், 2020

`இந்தியாவின் இளம் வயது மேயர்’ ஆர்யா ராஜேந்திரன்

இந்தியாவின் இளம் வயது மேயராக திருவனந்தபுரம் மாநகராட்சியில் பொறுப்பேற்றுள்ளார் 21-வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்!

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடந்தது. வாக்குகள் கடந்த 16-ம் தேதி எண்ணப்பட்டன!

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்!

கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களில், சி.பி.எம் 53 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. பா.ஜ.க 35 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களையும் பிடித்தன!

தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுடன் ஆர்யா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 21 வயதான ஆர்யா ராஜேந்திரனை சி.பி.எம் மாவட்டக்குழு, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்தது!

பி.எஸ்சி கணிதம், 2-ம் ஆண்டு படித்து வரும் ஆர்யா, எஸ்.எஃப்.ஐ மாநிலக்குழு உறுப்பினராகவும், சி.பி.எம் கட்சியின் பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.

முடவன்முகல் வார்டு கவுன்சிலரான இவரது தந்தை ராஜேந்திரன் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்துவருகிறார். தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜென்ட்டாக இருக்கிறார்!

ஆர்யா இல்லம்

ஆர்யா, `படிப்புடன் சேர்ந்து மக்கள் பணியையும் சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது ஆசை’ என்கிறார்.

``தேர்தல் நேரத்தில் மூன்று தேர்வுகள் நடந்தன. அவற்றை எழுதியிருக்கிறேன். படிப்பைத் தொடர்வதுடன், மக்கள் பணியும் செய்வேன்” - மேயர் ஆர்யா ராஜேந்திரன்

`திருவனந்தபுரம் மாநகராட்சியில் குப்பைகளைக் கையாளுவதிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டுவருவதிலும் அதிக முக்கியத்துவம்' - மேயர் ஆர்யா ராஜேந்திரன்

`இளைஞர்களும், மாணவர்களும் அரசியல் அமைப்பு, ஜனநாயகம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்!' - மேயர் ஆர்யா ராஜேந்திரன்



source https://www.vikatan.com/ampstories/news/politics/indias-youngest-trivandrum-corporation-mayor-arya-rajendran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக