Ad

சனி, 26 டிசம்பர், 2020

குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தைச் சேர்ந்தவர் பனிப்பிச்சை. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மேகலா (32) என்பவருக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து வயது மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மேகலா திடீரென மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். மேகலா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அவரது கணவர் பனிப்பிச்சை கூறினார். இதையடுத்து மேகலா உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், மேகலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் அந்தோணி அடிமை வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கல்குளம் தாசில்தார் ஜெகதா மற்றும் குளச்சல் ஏ.எஸ்.பி.விஸ்வேஸ் பி.சாஸ்திரி முன்னிலையில் மேகலாவின் உடல் நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

தேண்டி எடுக்கப்பட்ட உடல்

இதையடுத்து மேகலாவின் கணவர் பனிப்பிச்சையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியின் அக்காள் மகளை அடைவதற்காக பனிப்பிச்சை தனது மனைவியைக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பனிப்பிச்சையின் மனைவி மேகலாவின் அக்காவுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமி மீது பனிப்பிச்சை ஒருதலையாக ஆசைப்பட்டிருக்கிறார்.

Also Read: அபயா கொலை வழக்கு : பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை! - சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி

தான் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ மனைவி இடையூறாக இருப்பதாகப் பனிப்பிச்சை கருதியிருக்கிறார். இதனால், மனைவியை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனைவியை அடித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவர் உடல் நலக்குறைவால் இறந்ததாக நாடகம் ஆடியிருக்கிறார். மேகலாவின் 30-ம் நாள் நினைவு திருப்பலி முடியும் வரை பனிப்பிச்சை காத்திருந்திருக்கிறார்.

உடலைத் தோண்டி போலீஸ் விசாரண

அதன் பிறகு பனிப்பிச்சை ஒரு காதல் கடிதம் எழுதி தனது மகன் மூலம் அந்த 16 வயது சிறுமியிடம் கொடுத்திருக்கிறார். அந்த சிறுமி கடிதத்தைத் தனது தாயிடம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் சிறுமியை அடைவதற்காக தனது மனைவி மேகலாவை அடித்துக் கொன்றதாக பனிப்பிச்சை குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம்தான் பனிப்பிச்சை மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. அதன்பிறகுதான் புகார் அளிக்கப்பட்டது. இப்போது பனிப்பிச்சையை கைது செய்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/vellichanthai-police-arrest-man-over-wifes-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக