Ad

வெள்ளி, 26 ஜனவரி, 2024

பொள்ளாச்சி: `என்ன செய்தார் எம்.பி., கே.சண்முகசுந்தரம்?’ - உங்கள் கருத்து என்ன?!

பொள்ளாச்சி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சண்முகசுந்தரத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து 'என்ன செய்தார் எம்.பி?' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க...

கே.சண்முகசுந்தரத்தின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன... பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த சர்வேயில் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும். https://forms.gle/ujqfHX9Kk9EyQivp9?appredirect=website



source https://www.vikatan.com/government-and-politics/performance-analysis-on-pollachi-mp-shanmuga-sundram

Lal Salaam: ``விஜய்யை எனக்கு போட்டின்னு நினைச்சா..." காக்கா - கழுகு கதை குறித்து ரஜினி விளக்கம்

லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி 'மொய்தீன் பாய்' எனும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா ராஜசேகர் உட்படப் பலர் நடித்துள்ளனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பேசியுள்ள ரஜினி, "

லால் சலாம்

"என்னோட நண்பர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவாதாரிணி அகால மரணமடைந்திருக்காங்க. என்னோட ஆழ்ந்த இரங்கல்கள். அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த். கலைஞர், ஜெயலலிதா இருக்கும்போதே எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். சிவப்புக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவாங்க. வன்முறைக்கும் பயன்படுத்துவாங்க, புரட்சிக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்துருக்காங்க. இந்தக் கதைக்கு தேசிய விருது கிடைக்கும்னு என் மகள் சொன்னாங்க. அதுக்குப் பிறகு விருதுக்காக நான் கேட்கமாட்டேன்னு சொல்லிட்டேன். அதன் பிறகு இது உண்மை கதை சொன்னாங்க. அப்புறம் அந்தக் கதையை கேட்டேன். `ரஜினிகாந்த்தே இந்தப் படத்தைத் தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார்னு நிறைய பேர் பேசிகிட்டாங்க.' பாபா படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லன்னு நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாகிட்ட, நானே அந்தக் கதாபாத்திரம் பண்றேன்னு சொன்னேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் ரொம்ப முக்கியம். நண்பனுக்கும் எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. எதிரி உள்ள ஒன்னு வச்சுருப்பான். அவன் பெரிய எதிரி ஆகிடுவான்.

எனக்கு ஒரு நண்பர் இருக்கார். எனக்கு ஜெயிலர் ஹிட் சமயத்துல அந்த நண்பர் படம் பார்க்கக் கேட்டார். அடுத்த நாள் காலையில 10 மணிக்கு கால் பன்னேன். உண்மை சொல்லவா, பொய் சொல்லவானு கேட்டாரு... 30 சதவிகிதம் சந்தோஷம். 70 சதவிகிதம் சந்தோஷம் இல்லனு சொன்னார். எனக்கு வயிறு எரியுது. மூன்று முடிச்சுல இருந்து இப்போ ஜெயிலர் வரைக்கும் எந்த படம் ஹிட்டானாலும் உனக்கு நேரம் நல்லா இருக்குனுதான் சொல்வார். அதுக்கு பிறகு உனக்கு மேடையில பேசுறதுக்கு யார் இதெல்லாம் எழுதி தர்றாங்கனு கேட்டாரு.

ரஜினி

மத நல்லிணக்கம் பத்தி இந்தப் படம் முக்கியமாக பேசியிருக்கு. மனுஷங்க சந்தோசமாக இருக்கனுன்னுதான் மதம் உருவாச்சு. இப்போ நான்தான் பெருசு, நீதான் பெருசுனு பேசிக்கறாங்க. எந்த மதத்துல உண்மை, நியாயம் இருக்கோ. அதுதான் சரியாக இருக்கும். ஷூட்டிங்காக திருவண்ணாமலை போனப்போ ஏ.வ. வேலுவோட கெஸ்ட் ஹவுஸ்ல தாங்குனேன். பூலோகத்தோட கைலாஸம் திருவண்ணாமலை. இந்தப் படத்துல செந்திலுக்கு நல்ல கதாபாத்திரம் பண்ணியிருக்கார். செந்திலுக்கு எப்போவும் கவுண்டமணி அடிக்கடி கால் பண்ணுவார். அப்போ ஒரு முறை ஷூட்டிங்ல கால் பண்ணும் போது யார் ஷூட்டிங்ன்னு கேட்டிருக்கார். ரஜினினு செந்தில் சொன்னதும் ' அவனே முழுசா காமெடி பண்ணிடுவான், நீ எதுக்கு'னு கேட்டிருக்கார். காக்க கழுகு கதை வேற மாதிரி போயிடுச்சு. இவர் விஜய்யை சொல்றாருனு போட்டாங்க. அது ரொம்ப வருத்தமாக இருக்கு. விஜய் உழைப்பால இன்னைக்கு வேற உயரத்திற்கு வளர்ந்திருக்கார். இப்போ சமூக சேவைகள் நிறைய பண்ணிட்டிருக்காரு. விஜயை எனக்கு போட்டின்னு நினைச்சா, எனக்கு மரியாதை, கெளரவம் இல்லை. அதே மாதிரிதான் அவருக்கும்.



source https://cinema.vikatan.com/kollywood/actor-rajinikanth-speech-in-lal-salaam-movie-audio-launch-event

வியாழன், 25 ஜனவரி, 2024

கிளாம்பாக்கம் vs கோயம்பேடு - அடம்பிடிக்கும் ஆம்னி பஸ்... அசராத அரசு... பாதிப்பு மக்களுக்கு?!

சிக்கு கோலம் போல எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்று தெரியாமல் சர்ச்சைப் புள்ளிகளைச் சுற்றியே வலம்வந்து கொண்டிருக்கிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம். `ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்கவேண்டும், கோயம்பேட்டுக்கு வரக்கூடாது 'என அரசு தரப்பு கடுமையாக உத்தரவிட, `கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுத்துவதற்கு போதுமான இடமே இல்லை, அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்தபிறகு அங்கிருந்து இயக்குகிறோம்' எனக்கூறி அரசு உத்தரவுக்கு முரண்டு பிடித்து கோயம்பேட்டிலிருந்தே இயக்க முயற்சி செய்தது ஆம்னி பேருந்துகள் தரப்பு. இந்த இருதரப்புகளின் குடுமிப்பிடிச் சண்டையில் சிக்கி சீரழிவது என்னவோ பயணிகள் என்ற பொதுமக்கள் தான்!

கோயம்பேடு பேருந்து நிலையம்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்துமுனையம் திறக்கப்பட்ட பிறகு, கோயம்பேட்டிலிருந்து இயங்கிவந்த தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அத்தனை அரசுப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போதே தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவந்தனர். இந்த நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளும் இனி கோயம்பேட்டுக்குப் பதிலாக, கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்கவேண்டும் என தமிழக அரசு தரப்பில் சுற்றறிக்கை வெளியிட விவகாரம் பற்றியெறியத்தொடங்கியது.

சர்ச்சைக்கு சுழிபோட்ட சுற்றறிக்கை:

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சார்பில் வெளியிடப்ப்பட்ட சுற்றறிக்கையில், ``ஜன.24 -ம் தேதி இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. இதற்கு ஏற்றாற்போல் RED BUS, ABHI BUS உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ECR மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும், சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் சித்தூர், RED HILLS வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது!" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன்

ஏற்க மறுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்:

இந்த நிலையில், அரசின் உத்தரவை ஏற்க மறுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், ``தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்குவது சாத்தியமே இல்லை! 2 நாள் மட்டும் காலஅவகாசம் கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்பாகவே கோயம்பேட்டில் புக்கிங் செய்துள்ள பயணிகளின் பயணம் கேள்விக்குறியாகும். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி உள்ளதால் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும். மாறாக அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்!" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சிஎம்டிஏ தலைவரும் அமைச்சருமான சேகர் பாபு, ``ஜனவரி 24 முதல் கிளாம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது. தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும்!" எனத் தெரிவித்தார்.

குவிக்கப்பட்ட போலீஸ், பரிதவித்த பயணிகள்:

இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்தை இயக்காமல், வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்தே தங்களின் பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் முயற்சி செய்தனர். இதைத் தடுக்கும் விதமாக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் முன்பாக 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ஆம்னி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்-ஓட்டுநர்களுக்கும் காவல்துறை-சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் களேபரம் வெடித்தது. கோயம்பேட்டிலிருந்து ஏற்கெனவே டிக்கெட் புக்கிங் செய்து காத்திருந்த பயணிகள் வலுக்கட்டாயமாக கிளாம்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர் சேகர் பாபு

மேலும், தென்மாவட்டங்களிலிருந்து கிளாம்பாக்கத்தைத் தாண்டி சென்னை பெருநகருக்குள் கோயம்பேட்டை நோக்கி வந்த ஆம்னி பேருந்துகளும் காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டு, பாதிவழியிலேயே கிளாம்பாக்கத்துக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இவை தவிர, தை பூசம், குடியரசு தினம், வார இறுதிநாட்கள் என தொடர் விடுமுறையைக் கழிக்க தங்கள் ஊருக்குச் செல்ல முற்பட்டிருக்கும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பயணம் மேற்கொள்ள ஆட்டோ, கார்களில் சுமார் ரூ.500 முதல் ரூ.1500 வரை கட்டணம் கேட்பதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

எதிர்கட்சிகள் கண்டனம்:

இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``தொடர் விடுமுறையால் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் பேருந்துகள் முன்பதிவு செய்து கோயம்பேடு வந்தடைந்துள்ள வேளையில் காவல்துறையை வைத்து பேருந்துகள் உள்ளே-வெளியே செல்ல இயலாத வகையில் தடுப்புகளை அமைத்துள்ளனர். முன்பதிவு செய்து பேருந்து நிலையம் வந்த பயணிகளை 'உள்ளே போகாதீர்கள்!பேருந்து இங்கிருந்து இயங்காது! ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கிளாம்பாக்கம் செல்லுங்கள்'..என மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி மிரட்டி வருகின்றனர். இந்த அரசு மக்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது... கருணாநிதி பெயரில் கட்சி சின்ன வடிவில் பேருந்து நிலையம் கட்டினால் போதாது. அடிப்படை வசதிகள் வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை! திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை இன்னும் பிடிக்க முடியவில்லை. அப்பாவி மக்களையும் ஆம்னி‌ பேருந்து உரிமையாளர்களையும் மிரட்ட 500 போலிஸ் குவிப்பு! முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இல்லாத முட்டாள் அரசு!" என கடுமையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார்.

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சொன்ன விளக்கம்:

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ``ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கோயம்பேட்டை விட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும். ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



source https://www.vikatan.com/government-and-politics/kilambakkam-vs-koyambedu-bus-stand-issue-omni-bus-opposition-vs-dmk-government

நட்சத்திரப் பலன்கள்: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை! #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூராட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-star-signs-for-the-period-of-january-26th-to-february-1st

புதன், 24 ஜனவரி, 2024

தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள் - இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா?

தமிழ் கடவுளான, வெற்றி வேலவன் முருகனுக்குக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும்.

இந்த நன்னாளில் வெற்றிப் பொருநனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த தைப் பூச திருநாளில் முருகர்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம்.

‘பூசம் புண்ணியம் தரும்!’

இந்தியா மட்டுமின்றி உலகில் தென்னிந்தியர்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூசதினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தைப்பூச தின வரலாற்று சிறப்புகள் சிலவற்றைக் காண்போம்.

தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், நீரிலிருந்து உலக உயிரினமும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலேயே இந்நாளில் பல்வேறு ஆலயங்களில் தெப்ப திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய பார்வதி தேவி தன் சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கிய பிரம்ம வித்யா என்ற வேல்-ஐ வழங்கி அருளிய நாள் இது.

முருகப்பெருமான் வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில்தான் மணந்து கொண்டார் என்பது நம்பிக்கை.

தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். அன்று புதிதாகச் சமைத்த உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். "பூசத்தன்று பூனைக் கூட பழையதை உண்ணாது" என்ற பழமொழியும் உள்ளது.
தைப்பூசக் கோயில்கள்

தைப்பூச தினத்தன்று நடைப்பயணமாக பழனி முருகனுக்கு காவடி எடுத்துவந்த பக்தர்கள் பாடிய பாடல்களே பிரபலமான காவடி சிந்து பாடல்களாகும்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத பெருமாள் தன் தங்கையான சமயபுரத்து அம்மனுக்கு தைப்பூச நன்னாளில் காவிரி கரையில் சீர்வரிசைகள் கொடுப்பார். இதை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாள்கள் திருவிழா நடைபெறும்.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார், தைப்பூச நாளில்தான் ஜோதியாக மாறி இறைவனடி சேர்ந்தார். வழக்கமாக ஆறு திரைகளை நீக்கிக் காண்பிக்கப்படும் ஜோதி தரிசனம், தைப்பூச தினத்தன்று ஏழு திரைகளையும் அகற்றி முழுமையான ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்வார்கள்.

வஜன், வருகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் தோஷங்கள் தீர திருவிடைமருதூர் கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலிலுள்ள அசுவமேதப் பிரகாரத்தை சுற்றி வந்தால் பரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நெல்லையில் உள்ள தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நெல்லையப்பரை நினைத்து தவமிருந்த காந்திமதியம்மன், தைப்பூச நாளில்தான் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.
காவடி பக்தர்கள்

திருச்சேறை திருத்தலத்தில் காவிரி ஆனவள் ஸ்ரீமன் நாராயண பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவளது தவத்தால் மகிழ்ந்த நாராயண பெருமாள் அவருக்கு தைப்பூச நன்னாளில்தான் காட்சியளித்து அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.

மயிலம் கோயிலில் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மலைமீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியை காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள்.

தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை அவரது அஸ்தி கலத்திலிருந்து பதிகம் பாடி திருஞானசம்பர் உயிர்ப்பித்தார் என்று புராணம் கூறுகிறது.

முருகப் பெருமான், வள்ளி பிராட்டியை திருமணம் செய்துக் கொண்டதால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் முருகப்பெருமான் காட்சியளித்தாராம்.

முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் தைப்பூசத்தன்று பழனியில் கொண்டாடப்படுகிறது.

குளித்தலை கடம்பவன நாதர் தலத்தில் தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூச தரிசனம்

இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி, அலாதி திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான். தைப்பூச திருநாளில்தான் இரணியன் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்தித்து அருள் பெற்றதாக தில்லை புராணம் குறிப்பிடுகின்றது.

தில்லையில் நடராஜர் நடனமாடி காட்சியருள வேண்டுமென தவமிருந்து வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி போன்ற  முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச தினத்தன்றுதான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

இந்த நாளில் கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் பலரும் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றின் தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக முருக ஆலயங்களுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.


source https://www.vikatan.com/spiritual/festivals/lord-murugan-thaipusam-festival-important-happenings

ஜோக்ஸ்

ஓவியங்கள்: சேதுபதி

ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்


source https://www.vikatan.com/humour-and-satire/jokes/jokes-january-31-2024