Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

பிக்பாஸில் இந்த வாரம் அனிதா வெளியேறியது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

84 நாள்களைக் கடந்திருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 4. இந்த வார எவி்க்ஷனில் அனிதா சம்பத் வெளியேறியிருக்கிறார். அர்ச்சனாவின் 'அன்பு' அணியில் பலர் வெளியேறக் காரணமாக இருந்தவர் அனிதா என சமூக வலைதளங்களில் அனைவரும் புகழாரம் வாசித்த காட்சி மாறி, தற்போது அவர்களே அனிதாவை வெளியேற்றி இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் அவர் ஆரியை எதிர்த்ததுதான் என ஆரி ஆர்மி பொங்கி வருகிறது. அதே சமயம் பிக்பாஸில் இதுவரை எதுவுமே செய்யாத பலர் இன்னமும் உள்ளே இருக்கும் வேளையில், கேமை நன்றாக விளையாடிய சுரேஷ் சக்ரவர்த்தி, சனம், அர்ச்சனா, தற்போது அனிதா போன்றோர் தொடர்ந்து வெளியேறி வருவது இந்த எவிக்ஷனில் முதலிலிருந்தே ஏதோ உள்குத்து நடப்பதைக் காட்டுகிறது என்று ஒரு சாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனிதாவின் வெளியேற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/vikatan-poll-regarding-anitha-sampath-eviction-in-bigg-boss-tamil-season-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக