Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

பிக்பாஸ் ஓளிபரப்பு நேரம் மாறுகிறதா... `ராஜா ராணி 2' சீரியல் ஒளிபரப்பிலும் மாற்றம்... ஏன் தெரியுமா?

விஜய் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ராஜா ராணி 2'. சித்து, ஆல்யா மானசா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஒளிபரப்பாகத் தொடங்கி சில மாதங்களே ஆகியிருக்கும் சூழலில் தற்போது இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து தொடரில் நடித்து வரும் சில நடிகர்களிடம் பேசினோம். "ஆறரை மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடரை இரவு 9.30க்கு ஒளிபரப்பத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இந்த மாற்றம் இருக்கலாம். அப்படி மாறும்போது மீதமிருக்கிற பிக்பாஸ் எபிசோடுகள் ஒளிபரப்பாகும் நேரத்திலும் மாறுதல் இருக்கும்" என்றனர்.

பிக்பாஸ் கமல்

இந்த மாற்றத்தை அறிவிப்பதற்கான புரொமோ ஷூட் எல்லாம் கூட எடுத்து முடித்து விட்டார்களாம். அடுத்த ஒருசில தினங்களில் புரொமோ வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கிய புதிதில் கொஞ்சம் மந்தமாகப் போய்க் கொண்டிருந்த சீரியலின் கதையில் சில அதிரடிகளைப் புகுத்தவே, தற்போது நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், அதனாலேயே இந்த நேர மாற்றம் எனறும் சொல்லப்படுகிறது.

கூடவே இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. அரை மணி நேர சீரியல் ஒரு மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறதாம்.



source https://cinema.vikatan.com/television/raja-rani-2-telecast-time-change-may-push-bigg-boss-tamil-as-well

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக