கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகராக செயல்பட்டு வந்தவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தர்மே கவுடா. இவர் சிக்மகளூரு அருகே உள்ள கடூரில் ரயில் தண்டவாளத்தில் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் தர்மே கவுடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.. அந்த கடிதத்தையும் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 15-ம் தேதி கர்நாடக மாநில மேலவை சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பசுவதை தடுப்பு சட்டதை ஆளும் பா.ஜ.க அரசு தாக்கல் செய்ய கடும் முயற்சிகள் எடுத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் தனது இருக்கையில்அமர மறுத்துவிட்டார். இதனால், பா.ஜ.க-காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த துணை சபாநாயகரான தர்மே கவுடா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்மே கவுடாவை சபாநாயகர் இருக்கையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மேலவை பரபரப்பாக காணப்பட்டது. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்த 14 தினங்களில் சட்டமேலவை துணை சபாநாயகரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
`துணை சபாநாயகர் மற்றும் ஜே.டி.எஸ் தலைவர் எஸ்.எல்.தர்மேகவுடா தற்கொலை செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் ஒரு அமைதியான மற்றும் ஒழுக்கமான மனிதர். இது மாநிலத்தின் இழப்பு’ என தர்மே கவுடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/deputy-speaker-of-state-legislative-council-sl-dharmegowda-body-found-near-railway-track
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக