Ad

புதன், 30 டிசம்பர், 2020

`` மாஸ்டர்'ல பன்ச் டயலாக்கும், குறியீடும் இல்லை... ஆனால்?!'' - லோகேஷ் கனகராஜ் #VikatanExclusive

தியேட்டர்களில்தான் 'மாஸ்டர்' ரிலீஸாகும் எனச் சொன்ன சொல்லைக் காப்பாற்றியிருக்கிறது மாஸ்டர் டீம். ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' வெளியாகயிருக்கும் சூழலில் அதன் இயக்குநர் லோகேஷ் கனௐகராஜை ஆனந்த விகடன் பேட்டிக்காக சந்தித்தோம்.

'கைதி' படத்துக்கான பேட்டி எடுக்கும்போது, 'மாஸ்டர்' படத்துக்காக விஜய் அமைத்துக்கொடுத்திருந்த அலுவலகத்தில் இருந்த லோகேஷ் கனகராஜ், இப்போது 'மாஸ்டர்' படத்துக்காக சந்திக்கும்போது கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' அலுவலகத்தில் இருந்தார்.

'மாஸ்டர்' படத்தில்...

கொரோனா லாக்டெளன் நாட்களில் சொந்த ஊரான கோயம்புத்தூருக்குச் சென்றிருந்த லோகேஷ், தீவிரமாக பேட்மின்டன் ஆடி 8 கிலோ வரை எடை குறைந்து செம ஸ்லிம்மாக சென்னை திரும்பியிருக்கிறார். 'மாஸ்டர்' படத்தின் ஃபைனல் அவுட்புட் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மனத்திருப்தியை லோகேஷின் முகத்தில் பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விகடனுக்காக நேரம் ஒதுக்கி தன் 'மாஸ்டர்' அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் லோகேஷ்.

''இந்தப் படத்தை 50 சதவிகிதம் விஜய் சாரோட படமாகவும், 50 சதவிகிதம் என்னோட படமாகவும் எடுத்திருக்கேன். வழக்கமாக விஜய் சாரோட படங்களில் நிறைய பன்ச் டயலாக் இருக்கும். இதில் அவர் பன்ச் டயலாக் பேசியே நடிக்கலை. எந்தக் குறியீடும் படத்தில் இல்லை. ஏன் இல்லை என்பதற்கான பதில் 'மாஸ்டர்' படம் பார்க்கும்போது புரியும்” என்று 'மாஸ்டர்' பட சுவாரஸ்யங்கள் குறித்தும், விஜய்யை இயக்கிய அனுபவம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார் லோகேஷ்.

விஜய் | மாஸ்டர்

'மாஸ்டர்' படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகியிருக்கிறார். லோகேஷ் நடிக்கும்போது படத்தின் இயக்குநராக இருந்தது யார், விஜய் - விஜய்சேதுபதி படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யங்கள் என்ன, கமலின் 'விக்ரம்' படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் எனப் பல கேள்விகளுக்கான பதில் நாளை வெளிவரும் ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கிறது. தவறாமல் படியுங்கள். சினிமா விகடன் யூடியூப் தளத்தில் லோகேஷின் வீடியோ பேட்டியும் நாளை வெளியாகும்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/master-director-lokesh-kanagarajs-special-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக