Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

`பிரிட்டன் டு இந்தியா.. 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு; தனித்தனி அறைகளில் சிகிச்சை!’ - மத்திய அரசு #NowAtVikatan

6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு!

பிரிட்டனில் உருமாறிய வைரஸின் பரவலால் கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்புக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் பிரிட்டனில் இருந்து விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீப காலத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

கொரோனா வைரஸ்

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் கொரோனா பாசிட்டிவ் என கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் சளி மாதிரி, புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதியானது என்றும் அவர்கள் 6 பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது என்றும், அதில், 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/29-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக