Ad

புதன், 30 டிசம்பர், 2020

ராமர் கோயில் அஸ்திவாரத்துக்கு புது டெக்னிக்... காரணம் என்ன?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் மண் ஸ்திரமாக இல்லாததால், புது டெக்னிக்கைப் பயன்படுத்தி இங்கு கோயிலைக் கட்ட இருக்கிறார்கள்.

சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இதற்கு வலுவான கான்க்ரீட் தூண்களை எழுப்புவதற்கு முன்பு மண் பரிசோதனை நடத்தப்பட்டது. 'கோயில் கட்ட உள்ள இடத்தில் 200 அடிக்குக் கீழே மண் தளர்வாக உள்ளது. அதனால் கட்டுமானம் உறுதியாக இருக்காது' என்பது அந்தப் பரிசோதனையில் தெரியவந்தது. நதிக்கரை அருகே உள்ள இடம் என்பதால் இத்தகைய மண்தளர்வு சிக்கல் எழும் என்பது முன்பே கணிக்கப்பட்டிருந்தது.

ராமர் கோயில் மாதிரி படம்

இதைத் தொடர்ந்து ராமர் கோயில் அறக்கட்டளையும், ராமர் கோயில் கட்டுமானக் கமிட்டியும் டிசம்பர் 29ம் தேதி டெல்லியில் கூடிப் பேசின. "புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராமர் கோயிலுக்கான கட்டுமானம் எழுப்பப்பட உள்ளது. கட்டுமான என்ஜினியர்கள் இதற்கான வடிவமைப்பைச் செய்து வருகின்றனர்" என்கிறார், ராம ஜென்மபூமி டிரஸ்டின் உறுப்பினர் அனில் மிஸ்ரா.



source https://www.vikatan.com/news/temples/ayodhya-ramar-temple-base-to-be-built-with-new-technology

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக