Ad

புதன், 30 டிசம்பர், 2020

71 உயிர்களை பலி கொண்ட இராஜமலை தேயிலை தோட்ட நிலச்சரிவு! #Rewind2020

தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி இரவு 11.30 மணிக்கு நிலச்சரிவில் சிக்கியது மூணாறு இராஜமலை தேயிலை தோட்டம்!

பெரிய பெரிய பாறைகளால், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தில், 25 வீடுகளில் வசித்த 83 பேர் சிக்கினர்!

தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் இயந்திரங்களின் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது!

இறந்தவர்களின் உடல்களை மீட்க டிராக்டரில் செல்லும் கேரள மாநகராட்சி ஊழியர்கள்!

மீட்பு பணியில் பேரிடர் மேலாண்மை துறையினருடன் இணைந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்ட பணியாளர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்!

நிலச்சரிவு நடந்த இடத்தில் பல வீடுகள் இருந்ததற்கு சாட்சியாக , ஒரே ஒரு வீடு மட்டும் மீதம் உள்ளது‌!

இந்த நிலச்சரிவில் பலியான 71 பேரில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்!

தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீட்பு குழுவினரில் ஒருவர், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் காட்சி!

20 நாள்களுக்கு மேல் நடைபெற்ற மீட்புப் பணியில், நிலச்சரிவில் மண்ணில் புதைந்த உடல்களை இயந்திரம் மூலம் குழி தோண்டி தேடும் மீட்பு படையினர்!

கடும் பனியிலும் , மழையிலும் அருகில் இருப்பவர்கள் கூட தெரியாமல் இருக்கும் நிலையிலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது!

83 தொழிலாளர்கள் வாழ்ந்த இடம், மண்ணும் பாறையுமாக தரைமட்டமாக கிடக்கிறது!



source https://www.vikatan.com/ampstories/news/india/kerala-munnar-rajamala-landslide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக