Ad

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

முதல்வர் பழனிசாமியை சந்திக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன்! #NowAtVikatan

முதல்வர் - பா.ஜ.க தலைவர் இன்று சந்திப்பு..!

எல். முருகன்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கட்சிகள் தற்போதே பரபர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பல்வேறு கருத்துகள் தொடர்ந்து நிலவுகிறது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைகள், கூட்டணி கட்சிகளுக்கு இடம் முதலியவை தொடர் விவாத பொருளாக இருக்கும் இந்த சூழலில் இன்று மதியம், 1 மணிக்கு முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசுகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். இந்த கூட்டத்தில் கூட்டணி நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பரபரபான அரசியல் கட்டத்தில் இந்த சந்திப்பு நிகழ இருப்பது குறிப்பிடதக்கது.

உருமாறிய கொரோனா : முதல்வர் ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் உருமாறிய கொரோனாவை தடுப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார். புதிய தளர்வுகள் வழங்கலாமா, அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டுமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.



source https://www.vikatan.com/news/general-news/28-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக