Ad

செவ்வாய், 29 டிசம்பர், 2020

`முதல்வருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா?' - கரூர் நகராட்சியால் கொதித்த மக்கள்

கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலைக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கரூர் நகராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றாமல் துர்நாற்றம் வீசுவதாக கூறி, அப்பகுதி மக்கள் கரூர் நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதாவிடம் வாக்குவாதம் செய்யும் மக்கள்

Also Read: கரூர்: `இடித்த கோயிலைக் கட்டித் தரலை!' - சுங்கசாவடி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடும் மக்கள்

கரூர் நகராட்சியையொட்டி இருக்கிறது வாங்கப்பாளையம். கரூர் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் முறையாக குப்பைகளை அள்ளுவதற்கு வழக்கமான நடைமுறையை மேற்கொள்ளாமல், ஊழியர்களுக்கு தினம் ஒரு பகுதியாக குப்பை அள்ள பணி வழங்குவதால், தங்கள் பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.

நகராட்சி நிர்வாகத்துக்கு இதுகுறித்து தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பி வந்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்காமல், தங்கள் பகுதியை மோசமாக மாற்றிவிட்டதாக புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி வழியாக வந்த நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தையும் பொதுமக்கள் சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். வாங்கப்பாளையம் மக்கள் மட்டுமின்றி, காதப்பாறை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி ஆணையர் சுதா

இதனால், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கரூர் நகராட்சி ஆணையர் சுதா வருகை புரிந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது, பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், 'ஐந்து நிமிடம் சாலையைக் கடக்கும் முதலமைச்சருக்கு, 15 நாள்களாக சாலைகளை சுத்தம் செய்த நகராட்சி நிர்வாகம், இப்போது ஏன் மக்கள் சுகாதாரம் குறித்து அக்கறை கொள்ளவில்லை?' என கேள்வி எழுப்பியதால், பதில் சொல்லமுடியாத ஆணையர் அங்கிருந்து கிளம்பிசென்றார். தொடர்ந்து, நகராட்சி தரப்பில், தங்கள் பகுதியில் உள்ள குப்பையை அள்ள உத்தரவாதம் கொடுத்ததால், குப்பை வாகனத்தை மறித்த மக்கள், வாகனத்தைப் போக அனுமதித்தனர். போராட்டத்தையும் கைவிட்டனர்.

இதுகுறித்து, முன்னாள் கரூர் நகர்மன்ற தலைவர் கவிதா கணேசன், "நகராட்சியின் அலட்சியமே, இந்த பிரச்னைக்கு காரணம். குப்பைகளை அள்ளாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்காக நடந்துகொள்கிறது. பலமுறை மக்கள் கோரிக்கை வைத்தும், ஆணையர் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான், இன்று மக்கள் சாலைமறியல், குப்பை வாகனத்தை சிறைபிடித்தல் என்று போராட்டம் நடத்தினாங்க.

சுதாவிடம் வாக்குவாதம் செய்யும் மக்கள்

முதல்வருக்காக 15 நாள்களாக இந்த சாலைப் பகுதியை சுத்தம் பண்ணிய நகராட்சி நிர்வாகம், இப்போது மக்களுக்காக ஒருதடவைகூட குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முதல்வருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா?" என்று கேள்வி எழுப்பினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-people-protest-against-karur-municipality

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக