Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

``அனிதா இதை எப்படி தாங்கிக்கப் போறானு தெரியல!'' - கலங்கும் அனிதாவின் கணவர்

செய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டவருமான அனிதா சம்பத்தின் அப்பா ஆர்.சி. சம்பத் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். இவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். அனிதாவின் கணவர் பிரபாகரனை தொடர்பு கொண்டோம்.

அனிதா சம்பத் குடும்பத்துடன்

''போன வாரம் வியாழக்கிழமை மாமாவும் அனிதாவோட தம்பி கார்த்திக்கேயனும் ஷீரடிக்குப் போயிருந்தாங்க. நேத்து அங்கிருந்து ட்ரெயின்ல திரும்பி வர்றப்போ, மாமா தூங்கிட்டு இருந்திருக்கார். கார்த்திகேயன் எழுப்புறப்போ எழுந்துக்கலையாம்.

Also Read: அனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் திடீர் மாரடைப்பால் மரணம்! #BiggBoss #Anitha

பயந்துபோய், குண்டக்கல்னு ஒரு ஸ்டேஷன்ல வண்டியை நிறுத்தி மாமாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் செக் பண்ணதுல, 'ஹார்ட் பீட் இல்ல'ன்னு சொல்லிட்டாங்களாம். மாமா உடம்பை சென்னைக்கு எடுத்துட்டு வர வண்டிக்கு அரேன்ஜ் பண்ணிட்டிருக்கேன். உடம்பு வர்றதுக்கு இன்னும் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் ஆகிடும்.

அனிதா சம்பத்

அனிதா பிக்பாஸ்க்குள்ள போறதுக்கு முன்னாடி அவங்க அப்பாகிட்ட பேசினதுதான் கடைசி. பிக்பாஸிலிருந்து வெளியே வர்றதுக்கு முன்னாடியே மாமாவும் கார்த்திக்கேயனும் ஷீரடி கிளம்பிட்டதால, அதுக்கப்புறம் அனிதா இன்னமும் அவங்க அப்பாவைப் பார்க்கவும் இல்ல, பேசவும் இல்லை. நடுவுல ரெண்டு, மூணு தடவை போன் பண்ணப்போகூட கார்த்திக்கேயன்தான் போனை எடுத்தார். அனிதா இந்த இழப்பை எப்படி தாங்கிக்கப் போறா, அவளை எப்படி சமாதானப்படுத்தப் போறேன்னு தெரியலை'' என்பவரின் குரல் உடைகிறது.



source https://cinema.vikatan.com/celebrity/anitha-husband-speaks-about-anitha-father-r-c-sampaths-sudden-demise

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக