டாபுதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் பணிகளை வரும் 10-ம் தேதி அடிக்கல் நாட்ட இருக்கிறார் பிரதமர் மோடி. உலகத் தரம் வாய்ந்த பல வசதிகளோடு கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2022-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு தயாராகுமெனத் தெரிவித்திருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா.
Also Read: முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan
`சென்ட்ரல் விஸ்டா புராஜக்ட்' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கான ஏலத்தில், குறைந்த தொகையில் திட்டங்களை வகுத்து இந்தக் கட்டுமானப் பணி ஒப்பந்தத்தைக் கைப்பற்றியது டாடா நிறுவனம். 861.90 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்தை வகுத்து சமர்ப்பித்திருந்தது டாடா நிறுவனம்.
புதிய நாடாளுமன்றம்... சில தகவல்கள்!
* குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெச்.சி.பி டிஸைன் என்கிற நிறுவனம்தான், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்துள்ளது.
* புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணி, 2022-ம் ஆண்டு நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்தக் கட்டுமானப் பணியில் நேரடியாக 2,000 பேரும் மறைமுகமாக 9,000 பேரும் ஈடுபடவுள்ளனர்.
* புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மொத்தமாக 971 கோடி ரூபாய் செலவாகுமெனக் கணிக்கப்பட்டுள்ளது.
* புதிய நாடாளுமன்றத்தில் மொத்தம் நான்கு தளங்கள் அமைக்கப்படவுள்ளன.
* புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு 64,500 சதுர கி.மீ.
மக்களவையில் 888 இருக்கைகளும் மாநிலங்களவையில் 324 இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. தற்போது மக்களவையில் 543 பேரும் மாநிலங்களவையில் 245 பேரும்தான் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், எதிர்காலத்தில் இது அதிகரிக்கலாம் என்பதை மனதில் கொண்டு கூடுதல் இருக்கைகளோடு இரு அவைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* பிரதமர், ஜனாதிபதிக்கான சிறப்பு நுழைவாயில், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நுழைவு வாயில், சிறப்பு நுழைவாயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மற்றொரு நுழைவாயில், இரண்டு பொது நுழைவாயில்கள் எனக் கட்டடத்தில் மொத்தம் 6 நுழைவாயில்கள் அமைக்கப்படவுள்ளன.
* தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தைவிட புதிய கட்டடம் 17,000 சதுர கி.மீ அளவு பெரியது.
* நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமையும், தீ பரவாமலிருக்கும் திறனும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருக்கும்.
* புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலக அறைகள் அமைக்கப்படவுள்ளன.
* நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.
* இந்தியாவின் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டடத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் உள்படப் பல்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.
This will be built in an area of 64,500 sq.m at an expense of Rs 971 crores. Tata Projects Ltd has been given the contract for the project. The design has been prepared by HCP Design, Planning and Management Pvt Ltd: Lok Sabha Speaker Om Birla https://t.co/IAPTh0D1VF pic.twitter.com/SGJkLjvG77
— ANI (@ANI) December 5, 2020
Also Read: ``ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களுக்குத் தேவை ஆன்மிகமில்லை'' - விளாசும் மார்க்கண்டேய கட்ஜு!
தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடம்!
தற்போது செயல்பாட்டில் இருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு 1921-ம் ஆண்டு, பிப்ரவரி 12 தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 6 ஆண்டுகள் கழித்து 1927-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்தக் கட்டடம் கட்டுவதற்கு 83 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.
அந்தச் சமயத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் இர்வினால், 1927, ஜனவரி 18-ம் தேதியன்று இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/interesting-facts-about-new-parliament-building
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக