பிக்பாஸ் சீசன் 4-ன் இந்த வார எவிக்ஷனில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எலிமினேட் ஆகியிருக்கிறார்.
முன்னதாக கமல்ஹாசன் கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட்டிங் இன்று (26/12/20) பிக் பாஸ் செட்டில் நடந்தது.
ஆரி, ஷிவானி, ஆஜித், கேபி, அனிதா ஆகிய ஐந்து பேரும் இந்த வார வெளியேற்றத்துக்கான நாமினேஷனில் இருந்தார்கள்.
இவர்களில் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட ஓட்டுகளில் ஆஜித்துக்கும், அனிதாவுக்கும் சமமாகக் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அனிதாவா ஆஜித்தா என்று வந்தால், ஆஜித் காப்பாற்றப்படுவார் என்பது விஜய் டிவி ரசிகர்களுக்குத் தெரியும்தானே!
கடைசியில் அனிதா வெளியேறி இருப்பது தற்போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
அனிதா எவிக்ஷன் ஆன எபிசோடு நாளை (27/12/20) இரவு ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த வாரத்துக்கு முந்தைய வார எவிஷனில் சனம் மற்றும் அனிதா இருவரும் சமமாக ஓட்டுகள் வாங்கியதாகக் கூறப்பட்டு, கடைசியில் சனத்துடன் ஒப்பிடுகையில் அனிதா கன்டென்ட் தருவதாக சேனல் சனத்தை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/anitha-sampath-evicted-from-bigg-boss-tamil-season-4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக