Ad

சனி, 3 ஜூலை, 2021

குவிக் பால்ஸ் | யம்மி மசாலா சாட் | ஜில் ஜில் டிரிங்க் - கிட்ஸை குக் ஆக்கும் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

பள்ளிக்கூடங்கள் இல்லை... பயிற்சி வகுப்புகள் இல்லை... விளையாட்டில்லை... வெளியிடத்து கேளிக்கைகள் இல்லை... இப்படி ஏகப்பட்ட இல்லைகளுடன் நகர்ந்துகொண்டிருக்கிறது கொரோனா காலத்தில் குழந்தைகளின் உலகம். அலுப்பூட்டும் ஆன்லைன் வகுப்புகள், சலிப்பூட்டும் வாழ்க்கை முறை என உடல், மன அளவில் களைத்துப் போயிருக்கும் அவர்களை மாற்ற ஒரு வழி, அவர்களை கிச்சனுக்குள் அனுமதிப்பது.

அவர்களுக்குப் பிடித்த, அவர்களுக்குத் தெரிந்த உணவுகளைச் சமைக்க அனுமதியுங்கள். அடுப்பையும் கத்தி உள்ளிட்ட கருவிகளையும் பாதுகாப்பாகக் கையாளக் கற்றுக்கொடுங்கள்.

சமையல் மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குட்டீஸுக்கும்தான்... இந்த ரெசிப்பீஸை கொடுத்து இந்த வார வீக் எண்டு சமையலை குட்டீஸ் பொறுப்பில் விட்டுதான் பாருங்களேன்...

தேவையானவை:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கி, நறுக்கவும்) - கால் கப்
தேன் - சிறிதளவு.
எள் - கால் கப் (அரைத்துக்கொள்ளவும்).
பொட்டுக்கடலை மாவு, பனங்கற்கண்டுத்தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
விருப்பமான நட்ஸ் (உடைத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்.
காயந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்.
சீரக மிட்டாய் - சிறிதளவு.

குவிக் பால்ஸ்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பவுலில் ஒன்றாகப் போட்டுப் பிசைந்து பால்ஸ் மாதிரி உருட்டவும். வேண்டுமெனில் லாலிபாப் ஸ்டிக் செருகிப் பரிமாறவும்.

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய் (சேர்த்து) - ஒரு கப்.
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) அல்லது மசாலா பொரி - கால் கப்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்.
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.
தயிர் - அரை கப்.
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்.
உப்பு - சிறிதளவு.

யம்மி மசாலா சாட்

செய்முறை:

பெரிய பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய் போட்டு கேரட் துருவல், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து தயிர்விட்டு, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். பரிமாறும்முன் ஓமப்பொடி (அ) மசாலா பொரி தூவிப் பரிமாறவும்.

தேவையானவை:

விருப்பமான பழம் (2 விதமான பழம்) - ஒரு கப் (தோல், கொட்டை நீக்கி நறுக்கவும்).
பேரீச்சம்பழ சிரப் - 2 டேபிள்ஸ்பூன்.
டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்.
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
ஐஸ்கட்டி - தேவையான அளவு.
பாதாம் பிசின் - ஒரு டேபிள்ஸ்பூன்.

ஜில் ஜில் டிரிங்

செய்முறை:

பாதாம் பிசினை 3 மணி நேரம் நீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பழங்களை மிக்ஸியில் அடித்து எடுத்து, பேரீச்சம்பழ சிரப் கலந்து, பாதாம் பிசின் சேர்த்து, டூட்டி ஃப்ரூட்டி, குங்குமப்பூ தூவி, ஐஸ்கட்டி போட்டுப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/quick-balls-yummy-masala-chat-chill-chill-drink-kids-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக