ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்துக்கு ஐந்து லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஒரு ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சித் தேர்தலின் மூலம் ஜம்மு-காஷ்மீரில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
டெல்லியில் சிலர் ஜனநாயகம் குறித்து நாளுக்கு நாள் எனக்குப் பாடம் எடுக்கிறார்கள். ஜனநாயக வழியில் நடக்கவில்லை என்று எங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை’’ என்றார்.
Also Read: ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: 75 இடங்களில் வெற்றி - பா.ஜ.க-வுக்கு வளர்ச்சியா, பின்னடைவா?
காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய பிரதமர் மோடி, ``உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் புதுச்சேரியில் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்தைப் பின்பற்றும் செயல் அல்ல.
முந்தைய பத்து ஆண்டுக்காலமாக ஆட்சியிலிருந்தவர்கள் எல்லையோரப் பகுதிகளின் வளர்ச்சிப் பணியில் கவனம் செலுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீரில் படிப்படியாக அனைத்து வகையான வளர்ச்சி பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது" என்று கூறினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/those-who-teach-me-a-lesson-about-democracy-is-what-they-are-doing-modi-digs-at-congress
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக