Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

`சீன உளவுத்துறையின் கருவி!’ - டிக் டாக்குக்கு தடை விதிக்கும் அமெரிக்கா

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பனிப்போர் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்திய அரசு 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்குத் தடை விதித்தது போலவே அமெரிக்காவும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன செயலியான டிக் டாக்குக்கு தடை விதிக்கவுள்ளது. சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அதிகாரிகளும், சென்னடர்களும் டிக்டாக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால் தங்களுக்கும் சீன அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என டிக் டாக் நிறுவனம் விளக்கமளித்து வந்தது.

ட்ரம்ப்

இந்நிலையில் நேற்று ஏர் ஃபோர்ஸ் ஒன்னின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “டிக் டாக்கை பொருத்தவரை நாங்கள் அதை அமெரிக்காவிலிருந்து தடை செய்கிறோம். அவசரக்கால பொருளாதார சட்டம் அல்லது நிர்வாக உத்தரவைப் பயன்படுத்தி மிக விரைவில் டிக் டாக் தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன். அந்த செயலி சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக் கூடும் என அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனப் பேசியிருந்தார்.

Also Read: டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை விசாரிக்கும் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழு மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த நடவடிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ``நாங்கள் அரசியல் சார்ந்தவர்கள் இல்லை. நாங்கள் எந்த அரசியல் விளம்பரங்கள் மற்றும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் ஏற்பதில்லை. அனைவரும் ரசிக்கும் படியான துடிப்பான, ஆற்றல் மிக்க தளமாக இருப்பதுதான் எங்கள் ஒரே நோக்கம். டிக்டாக் சமீபத்திய இலக்காக மாறியுள்ளது. ஆனால் நாங்கள் எதிரிகள் இல்லை” என டிக் டாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயன் தெரிவித்துள்ளார்.

டிக் டாக்

டிக் டாக் என்ற சீன மொபைல் செயலி இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. இது உலகம் முழுவதும் பல பில்லியின் பயனர்களைக் கொண்டுள்ளது.

Also Read: டிக் டாக் தடையால் ஜாக்பாட்! - ஒரு கோடி டவுன்லோடுகளைக் கடந்த `சிங்காரி’



source https://www.vikatan.com/news/international/us-will-ban-app-tiktok-trump-has-said

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக