கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலுள்ளது. ஏழாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல தளர்வுகளுடன் கூடிய எட்டாம் கட்ட ஊரடங்கு இன்று (செப்டம்பர் 1) முதல் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தளர்வுகள் என்னென்ன?
* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அந்தந்த மாவட்ட எல்லைக்குள்ளே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னையிலும் பேருந்துகள் இயக்கப்படும்.
* 07.09.2020 முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.
* வணிக வளாகங்கள், மால்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* பூங்காக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும், வேறு மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.
* அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது .
* பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படத் தடை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீடிக்கும்.
திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கான கட்டுப்பாடுகள்
திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் கலந்துகொள்ள அனுமதி என்று முன்பிருந்த அதே நடைமுறை தொடரும்.
மால்கள், பூங்காக்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்
-
பூங்கா, மால்களுக்கு வருபவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து, உடல் வெப்பநிலை கண்டறிந்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.
-
எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள் மட்டுமே பூங்கா, மால்களுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவேண்டும்.
-
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்த வண்ணமே இருக்க வேண்டும்.
-
அனைவரும் 6 அடி தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
-
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கங்கே பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.
-
குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைகளில் அனுமதிக்கப்பட வேண்டும்.
-
லிப்ட் மற்றும் எக்ஸலேட்டர்களில் கட்டாயம் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
-
பூங்காக்களில் செயல்படும் உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
-
குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடையாது.
சினிமா படப்பிடிப்பில் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?
-
75 நபர்களுக்கு மிகாமல் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் .
-
பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
-
படப்பிடிப்பு பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
-
6 அடி தனிமனித இடைவேளையைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளைச் சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
-
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படவேண்டும். அதோடு எவ்வித அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் .
-
பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.
-
நோய்க் கட்டுப்பாடு பகுதியில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது.
பேருந்துகளில் கடைப்பிடிக்க வேண்டியவை
-
பேருந்துகளைப் பொறுத்தமட்டில், ஒரு இருக்கைக்கு மற்றொரு இருக்கைக்கும் இடைவெளிகள் இருக்க வேண்டும்.
-
ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படப் பின்னரே பேருந்தில் ஏற அனுமதியளிக்கப்படும்.
-
ஒரு பேருந்தில் குறைந்த அளவான பயணிகளை மட்டுமே ஏற்றவேண்டும்.
-
பேருந்தில் கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.
-
பேருந்துகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
-
பேருந்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என பல்வேறு விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கடந்த முறை பேருந்து இயங்க அனுமதியளித்த போது அரசு கூறியிருந்தது.
Also Read: `சொந்தக் காசில் பயணிகளுக்கு இலவச சேவை!'- நெகிழவைக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்
வழிபட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நடைமுறைகள்
-
கோயில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே செல்லும் அனைவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட வேண்டும். கைகளைக் கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.
-
உள்ளே வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். அதோடு, கட்டாயம் ஆறு அடி தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
-
பூஜை மற்றும் அபிஷேகத்தின் போது, உள்ளே அமர்ந்து தரிசனம் செய்யக் கூடாது.
-
இயல்புநிலை திரும்பும்வரை திருவிழாக்கள், ஊர்வலங்கள் ஆகியன தடை செய்யப்படுகின்றன.
-
வழிபட்டுத் தல வளாகங்களில் உட்கார்ந்து உணவருந்தத் தடை.
-
ஒரு நேரத்தில் ஒரேயொரு திருமணம் நடத்த மட்டும் அனுமதி. ஆலய வளாகத்துக்குள் நடக்கும் திருமணங்களில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்
-
தீர்த்தக் குளத்தைப் பக்தர்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
-
நோய் கட்டுப்பட்டு பகுதியில் உள்ள வழிபட்டு தலங்கள் இயங்க அனுமதி கிடையாது.
-
உள்ளே செயல்படும் கடைகள் தனிமனித இடைவெளியுடன் செயல்பட அனுமதி.
-
வளாகங்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
-
மசூதிக்கு வருபவர்கள் அவர்களே தொழுகை விரிப்புகளைக் கொண்டுவரவேண்டும்.
-
முடிந்தவரை வீட்டிலேயே வழிபாடுகளை நடத்த வலியுறுத்தியுள்ளார்.
தடை நீட்டிக்கப்பட்டவை
-
மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
-
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
-
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை நீடிக்கும்.
source https://www.vikatan.com/news/tamilnadu/tn-governments-sops-for-temples-malls
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக