கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நாட்டுக்கால்பாளையம் எனும் பகுதி இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 70 அடியில் ஒரு கிணறு இருக்கிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மான் திடீரென்று கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.
Also Read: மான் குட்டியும் மீன் போன்ற கண்களும்! #KidsTalentCorner
இதைப் பார்த்த மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு முன்பே, பொதுமக்கள் அந்தக் கிணற்றில் இருந்தத் தண்ணீரை மோட்டர் மூலம் வெளியேற்றிவிட்டனர்.
இதையடுத்து, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மான் கிணற்றுக்குள் அங்கு இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. மூன்று மணி நேரத்துக்குப் பிறகு வலை மற்றும் கயிறு உதவியுடன் மானை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மான் விழுந்தத் தகவல் தெரிந்து, உடனடியாக அதை பத்திரமாக மீட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு பொது மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், ``கிணற்றுக்குள் விழுந்ததால், மானுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் மருந்து தடவியுள்ளோம். அதேபோல, மானுக்கு ஆன்டிபயாடிக் ஊசிகளும் போடப்பட்டுள்ளன. தற்போது மான் நலமாக இருக்கிறது.
கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மானை மீண்டும் வனப்பகுதியில் விட்டுள்ளோம்” என்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/deer-rescued-after-3-hours-in-pollachi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக