நம்மைவிடப் பிரபஞ்ச ஆற்றலை அதிகம் எடுத்துக்கொள்பவை தாவரங்கள்தாம்! வெறும் மண், நீர், சூரிய ஒளி ஆகியன மட்டுமே அவற்றின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதில்லை. பிரபஞ்சத்தில் இருந்து எடுத்துக்கொள்ளும் ஆற்றலைப் பூவாக, கனியாக அவை மனிதர்களுக்குக் கொடுக்கின்றன. அதோடு மனிதரும் நேரடியாகப் பிரபஞ்ச ஆற்றலைக் காற்றிலிருந்து எடுத்து நலம் பெறுகிறான் என்பதே யோக சாஸ்திரத்தின் அடிப்படை. ஆனால் பிரபஞ்ச ஆற்றலை எந்த அளவுக்கு ஒருவன் கிரகித்துக்கொள்கிறான் என்பதில்தான் அவனின் வளர்ச்சி நிலை வேறுபடுகிறது.
மனிதர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் செயலாகத் திகழ்வது பிராணனே. எண்ணமாகவும் செயலாகவும் உருவெடுப்பதும் பிராணனே. அப்படியானால் இதையே ஆதார சக்தியாக நாம் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆதார சக்தியை நம் உடலுக்குள் நிலைநிறுத்திக் கையாளுவதே இரண்டாம் பயிற்சி. பிரபஞ்ச ஆற்றலைக் காற்றிலிருந்து பிரித்தெடுக்கும் யோகமுறை. இதனால் நம் தூல சரீரமும், சூட்சும சரீரமும் பலப்படும்.
Also Read: நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் எளிமையான 7 பயிற்சிகள்... சித்தர்கள் அருளிச்செய்த பிராண சக்தி யோகா!
இந்தப் பயிற்சியால் மனோசக்தி பெருகும். மனம் சஞ்சலம் அடையாமல் ஒருநிலைப்பட்டு நம் வசமாகும். மனமது செம்மையானால் மற்றவை யாவும் சிறப்பாக நடந்தேறும் அல்லவா! எனவே இந்த இரண்டாவது பயிற்சியால் எண்ணியதைச் செய்துமுடிக்கும் திண்ணிய ஆற்றலை, மன வலிமையைப் பெறுவோம் என்பது உறுதி.
-
இந்தப் பயிற்சிகளை தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும்.
-
இரவில் செய்வது கூடாது. மூச்சு சம்பந்தப்பட்டது என்பதால் சிக்கல் வரலாம். சூர்ய பகவானே பிராண சக்தியின் அதிபதி என்பதால் சூரியன் உதிக்கும் இளம்காலை அல்லது அந்தி மாலை நேரம் உகந்தது.
-
உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியைச் செய்ய வேண்டும்.
-
நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.
-
உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது. மிகுந்த பசியிருப்பின் கொஞ்சமாகக் கஞ்சி அல்லது பழங்கள் எடுத்துக்கொண்டு செய்யலாம்.
-
உடைகள் தளர்வாக இருப்பது நலம்.
நாள்: 6.9.2020
நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை
இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/spiritual/news/learn-prana-sakthi-yoga-online-with-the-help-of-sakthi-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக