Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

`ஒரே நாளில் 78,512 பேருக்கு தொற்று; 36 லட்சத்தை கடந்த மொத்த பாதிப்பு!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

ஒரே நாளில் 8.46 லட்சம் மாதிரிகள் பரிசோதனை!

இந்தியாவில் ஒரே நாளில் 8.46 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 4.23 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,21,246 -ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கோவிட்-19

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64,469 -ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,74,802-ஆக உயர்ந்துள்ளது

உலக அளவில் கொரோனா!

கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,53,84,547 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று உலகம் முழுவதும் இந்த கொடிய வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 8,50,591 ஆக உள்ளது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் 1,77,06,841 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், தொற்று பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன!

ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனு!  - இன்று விசாரணை

சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இன்று அந்த மனு மீதான விசாரணையை தொடங்குகிறது உச்ச நீதிமன்றம்!



source https://www.vikatan.com/news/general-news/31-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக