தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 37 வயதான இவர் ராணுவத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
அதனால், அவரது மனைவி வெங்கடேசனிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். இதனால், மன உளைச்சலில் வெங்கடேசன் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோழி இறைச்சிக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன், கடைக்கு முன் வாகனத்தை நிறுத்திவிட்டு இறைச்சி கடைக்குள் நுழைந்திருக்கிறார்.
Also Read: `பரிசோதனையில் நெகட்டிவ்; தனிமை வார்டு மனஉளைச்சல்!' -கேரள கொரோனா வார்டில் விபரீத முடிவெடுத்த 2 பேர்
கடைக்குள் நுழைந்த வெங்கடேசன், இறைச்சி வெட்டும் கட்டையில் தனது இடது கையை வைத்து வலது கையில், இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மணிக்கட்டை நான் கைந்து முறை வெட்டியிருக்கிறார். இதை பார்த்து அலறிய இறைச்சிக் கடை ஊழியர்கள், கடைக்கு வெளியே ஓடியிருக்கிறார்கள். கை துண்டானநிலையில், அதைக் கண்டுகொள்ளாமல் கடையை விட்டு வெளியேறிய வெங்கடேசன், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். வடக்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து சாலையில் நின்றிருந்த வெங்கடேசனைப் பிடித்து, துண்டான கையுடன் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் துண்டான கையைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு வெங்கடேசனை போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
``முன்னாள் ராணுவ வீரர், மனஉளைச்சல் காரணமாக தனது கையை சிக்கன் வெட்டுவது போல வெட்டிக் கொண்டது, தூக்கிவாரிப் போட்டது'' என்று அதிர்ச்சி விலகாமல் பேசுகிறார்கள் இறைச்சிக் கடையில் பணியாற்றியவர்கள். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/cumbum-retired-army-man-chops-his-own-hand
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக