மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சிவசேனாவில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி கோஷ்டி தலைதூக்கி இருக்கி இருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் உட்பட 50 பேர் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை உடைக்க தேவையான எம்.எல்.ஏ-க்கள் கிடைத்த பிறகும் அவர்கள் இன்னும் அசாமை விட்டு வராமல் இருக்கின்றனர். வரும் 30-ம் தேதி வரை அங்கேயே தங்கி இருப்பார்கள் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. அதிருப்தி கோஷ்டி தங்களது அணிக்கு சிவசேனா(பாலாசாஹேப்) என்று பெயர் கூட தேர்வு செய்துவிட்டனர். ஆனால் சிவசேனா அல்லது பால் தாக்கரே பெயரை பயன்படுத்த அனுமதிக்ககூடாது என்று கூறி சிவசேனா தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக தலைவர்களோடு ஏக்நாத் ஷிண்டே நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் முக்கிய ஆலோசனை நடத்தினார். நள்ளிரவு வரை நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உட்பட சில மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வதோதராவில்தான் இருந்துள்ளார். அவரையும் ஷிண்டே சந்தித்து பேசினாரா என்று தெரியவில்லை.
ஆனால் மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி 16 எம்.எல்.ஏ-க்களின் பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதற்கு திங்கள் கிழமைக்குள் பதிலளிக்கவேண்டும். இப்பிரச்னை குறித்தும் ஷிண்டே பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சந்திப்பை தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் அடுத்த நகர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு மீண்டும் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் அசாமிற்கு சென்றுவிட்டார்.
source https://www.vikatan.com/news/politics/shiv-sena-dissident-leader-eknath-shinde-holds-key-consultations-with-bjp-leaders-in-gujarat-at-midnight
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக