பிரபஞ்ச ஆற்றலைக் காற்றிலிருந்து பிரித்தெடுத்து அதை உடலுக்குள் முறையாகச் செலுத்துவதே மூன்றாவது பயிற்சி. பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கும் அபூர்வமான காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிராண சக்தி ஆற்றல் உடலுக்குள் பரவி உள் மண்டலங்கள் எங்கும் நிறைந்து சகல நோய்களையும் குணமாக்கவும், நரம்பு மண்டலங்களை புத்துணர்ச்சியாக்கவும் உதவும். உடலுக்குள் பரவும் பிராண சக்தி ஒளி மிகுந்த உடலை உருவாக்கப் பெரிதும் உதவும்.
மேலும் உடலுக்குள் இருக்கும் ஆதார சக்கரங்களை இயக்கி, தேக வலிமையையும் ஞான வலிமையையும் அளிக்கும். உடல் சோர்வுகள் நீங்கி, புத்துணர்ச்சி பெருகும். ஐம்புலன்களும் கூர்மையாகச் செயல்புரியும். உணவு, ஒளி, காற்று மட்டுமின்றி இந்தப் பிராண சக்தி ஆற்றலும் நம் உடலுக்குள் சேரச் சேர சித்தர்கள் போன்ற யோக வாழ்வை நாம் பெறலாம் என்பது உறுதி.
Also Read: சூட்சும திருஷ்டியை நேர்மறை ஆற்றலாக மாற்றி உடலை மனதை வளப்படுத்தும் பிராண சக்தி யோகா!
-
இந்தப் பயிற்சிகளை தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும்.
-
இரவில் செய்வது கூடாது. மூச்சு சம்பந்தப்பட்டது என்பதால் சிக்கல் வரலாம். சூர்ய பகவானே பிராண சக்தியின் அதிபதி என்பதால் சூரியன் உதிக்கும் இளம்காலை அல்லது அந்தி மாலை நேரம் உகந்தது.
-
உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியைச் செய்ய வேண்டும்.
-
நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.
-
உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது. மிகுந்த பசியிருப்பின் கொஞ்சமாகக் கஞ்சி அல்லது பழங்கள் எடுத்துக்கொண்டு செய்யலாம்.
-
உடைகள் தளர்வாக இருப்பது நலம்.
நாள்: 6.9.2020
நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை
இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/spiritual/news/prana-sakthi-online-yoga-event-to-be-conducted-by-sakthi-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக