Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கூடலூர் : பாலம் கேட்டு மனு கொடுத்தால், வீடு கட்டித்தரப்படும்னு பதில் வருது!’ - அதிகாரிகள் அலட்சியம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். மக்கள் செயல்பாட்டாளரானா இவர் கடந்த மாதம் ஜமாபந்தி (வருவாய் ஆயத்தீர்வைக்கு) ஆன்லைன் மூலம் ஒரு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார்.

சிவசுப்பிரமணியம்

அதில்,`நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் பொன்னானி -அம்மன்காவு செல்லும் சாலையில் குறுக்கே ஆற்றைக் கடந்து செல்ல சிறிய மரத்திலான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாத‌ நிலை ஏற்படுகிறது. எனவே, அரசு சார்பில் நிரந்தர பாலம் ஒன்று கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்திற்கு ஒரு மாதம் தாமதித்து பதில் அளித்த கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்,``எதிர்வரும் நிதியாண்டில் மனுதாரருக்கு ‌முன்னுரிமை அடிப்படையிலும், உரிய‌ சான்றிதழ்களின் அடிப்படையிலும் வீடுகள் கட்ட‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இவ்வலுவலக ந.க.அ2 எண் 746/2019 வட்டார வளர்ச்சி அலுவலர் கூடலூர் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்'’ என தொடர்பே இல்லாத வேடிக்கையான ஒரு பதிலை அளித்துள்ளது.

ஜமாபந்தி மனு

இதுகுறித்து நம்மிடம் பேசிய மக்கள் செயற்பாட்டாளரும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவ சுப்பிரமணியம், ``ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடத்தப்படும் ஜமாபந்திக்கு, கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவித்திருந்தது.

Also Read: `அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ்' - `நீட்'டுக்கு வளையாத தமிழக அரசு ஓட்டுக்கு வளைந்துவிட்டதா?

அம்மன்காவு சாலையின் குறுக்கே ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் மாணவ மாணவிகளும், தோட்டத் தொழிலாளர்களும் தவித்து வருகின்றனர். எனவே பாலம் ஒன்றை கட்டித்தர வேண்டி‌ மனு அளித்தால், உங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என‌ சம்பந்தமே இல்லாத ஒரு பதிலை, அதுவும் ஒரு மாதம் கழித்து அனுப்புகின்றனர். இது அரசுத் துறையின்‌ அலட்சித்தையும், ஜமாபந்தியை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது. இது மக்கள் மீதான அலட்சியத்தையும் காட்டுகிறது" என ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்.

ஜமாபந்தி மனு

கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,``மக்களின் கோரிக்கை விண்ணப்பத்திற்கு உரிய பதிலை‌ மட்டுமே அளித்து வருகிறோம்" என‌ மழுப்பலான பதிலையே தெரிவித்து சமாளிக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/gudalur-government-officials-shocking-answer-to-petitioner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக