Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

தங்க கடன் பத்திர விற்பனை ஆரம்பம்... குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கத்தில் முதலீடு செய்வது மூலம் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற முதலீடு தங்க கடன் பத்திரம் (Sovereign Gold Bond). இதன் ஆறாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, நேற்று (ஆகஸ்ட் 31, 2020) தொடங்கியுள்ளது. இதில் செப்டம்பர் 6 வரை முதலீடு செய்யலாம்.

கிராம் ரூ. 5,117

இதில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறைந்த அளவாக, ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ.5,117 (24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை) இருந்தால் போதும். இதில் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும். தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.

ஒரு நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) தனிநபர் ஒருவர் அதிகபட்சம் 4 கிலோ மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் உங்கள் வாய்ப்பு வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம்

தங்க நகையாக வாங்கும் போது உள்ள கொடுக்கும் செய்கூலி, சேதாரம் இதில் இல்லை. இதில், தங்கமாக தரமாட்டார்கள். விற்கும் போது பணமாக தருவார்கள். அதனைக் கொண்டு நீங்கள்தான் தேவைப்பட்டால் நகையாக வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமாக கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்தத் தங்க கடன் பத்திரங்கள் மீது வர்த்தகம் நடப்பதால் பணத்தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும். முதலீட்டை 8 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம்.

தங்கம்

ஐந்தாண்டுகள் `லாக்இன்' காலம் இருக்கிறது. இது கடந்த பிறகு, பணம் தேவைப்படும்பட்சத்தில் எப்போது வேண்டுமானலும் விற்று பணமாக்கிக் கொள்ள முடியும். மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

ஆன்லைன் மூலம் முதலீடு

கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக இந்தத் தங்க கடன் பத்திரங்களை கொடுக்கலாம்.

ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது கிராம் ஒன்றுக்கு விலையில் ரூ. 50 தள்ளுபடி கிடைக்கும். ஆன்லைன் மூலம் இந்த கோல்டு பாண்டை வாங்க டீமேட் என்கிற மின்னணு கணக்கு தேவை.

இந்தத் தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக தர மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாகத் தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்



source https://www.vikatan.com/business/investment/sovereign-gold-bonds-open-for-subscription-details

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக