டெல்லிக்கு ராஜாவாக இருக்கலாம், ஆனால், தமிழகத்தில் இன்னும் வளரவில்லை என்று பா.ஜ.க குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
அஅமைச்சர் செல்லூர்ராஜூ பேசும் கருத்துகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. அ.தி.மு.க - பா.ஜ.க இடையே உரசல் இருந்துவருவதாகக் கூறப்படும் நிலையில், செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``இந்தியாவிலயே முதன்முறையாகத் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான கூட்டுறவு நாணய சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
மு.க.ஸ்டாலின், தனது இருப்பைக் காட்டுவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார், ஸ்டாலினிடம் பாராட்டுப் பெறுவது என்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்து வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம்'' என்றவரிடம்,
Also Read: பா.ஜ.கவின் `ஆபரேஷன் நார்த் தமிழ்நாடு', செம அப்செட்டில் செல்லூர் ராஜூ... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்
``பா.ஜ.க கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று ஹெச்.ராஜா கூறியுள்ளாரே'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்தக் கேள்விக்கு,``ஹெச்.ராஜா எதாவது பேசிகொண்டே இருப்பார். பா.ஜ.க டெல்லிக்கு ராஜாவாக இருக்கலாம்.ஆனால், தமிழகத்தில் இன்னும் வளரவில்லை. மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை; மனிதநேயமிக்க பிரதமர், மோடி மட்டும்தான். திராவிட இயக்கங்கள் மீதுதான் தமிழகத்தில் தேசியக் கட்சிகள் சவாரி செய்ய முடியும்'' என்று செல்லூர் ராஜூ பதிலளித்தார்.
மேலும் அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று நடிகர் விஜய் தம்பதியினரை சித்தரித்த போஸ்டர் பற்றி கூறுகையில், ``விஜய் ரசிகர்கள் சின்னப் பிள்ளைகள். விஜய் தமிழர்; நல்ல நடிகர் அவ்வளவுதான். அவர்களுக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது ஈர்ப்பு உள்ளதைக் காட்டுகிறது'' என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ பா.ஜ.க பற்றி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-sellur-raju-speaks-about-bjp-in-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக