Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

இ-பாஸ் முதல் பொது முடக்கம் வரை...! - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை #NowAtVikatan

ஹெச். வசந்தகுமார் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி!

சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஹெச். வசந்தகுமார் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,63,973 -ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,021 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62,550 -ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,48,999 -ஆக உயர்ந்துள்ளது

ஊரடங்கு.... முதல்வர் இன்று ஆலோசனை!

மாவட்டங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்கிடையே சென்றுவர கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தளர்த்தப்படுமா என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதனிடையே , வரும் 31 ஆம் தேதியுடன் அமலில் இருக்கும் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்துக்குப் பிறகு, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது பற்றிய முக்கிய முடிவுகள் வெளியாகவுள்ளன.



source https://www.vikatan.com/news/general-news/29-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக