Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

`இது இறைவன் கட்டளை..!’ - பழக்கடைக்காரர் வீசிய பேப்பர்... நெகிழ்ந்த முதல்வர்

தமிழக முதல்வர், திருவாரூர் மாவட்ட கொரோனா ஆய்வை முடித்துக்கொண்டு நீடாமங்கலம் வழியாக தஞ்சைக்கு காரில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். நீடாமங்கலம் அண்ணா சிலை அருகே முதல்வரின் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றபோது, திரண்டிருந்த பொதுமக்களிடையே முதல்வர் கையசைத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். அப்போது முதல்வரின் வாகனத்தின் முன் கண்ணாடிவழியே ஒருவர் கையால் எழுதிய வாசகம் அடங்கிய நோட்டு பேப்பரை முதல்வரின் கவனத்துக்குச் செல்லுமாறு வீசினார். அந்தத் தாள் காரின் கண்ணாடிமீது பட்டு கீழே விழுந்துவிட்டது.

ரத்தினவேல்

பாதுகாப்பு காவலர்கள் அந்த நபரைத் திட்டிவிட்டு, அந்த பேப்பரை எடுத்துக்கொண்டனர். இதை கவனித்த முதல்வர் பாதுகாப்புக் காவலர்களை அழைத்து, `பொதுமக்களிடம் இப்படி நடந்துகொள்ளக் கூடாது’ என அறிவுறுத்தி, அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தார். அதில், `தமிழ்க் கடவுள் பழனி முருகன் பெயர்கொண்ட பழனிசாமி ஆகிய தாங்கள்தான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் முதல்வர். இது இறைவன் கட்டளை" என எழுதி, தமிழக அரசின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டிக் குறிப்பிட்டிருந்தார் அந்த பேப்பரை வீசியவர்.

உடனே முதல்வர் அந்த நபரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரச் செய்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, பூங்கொத்து கொடுத்து மகிழவைத்து, மீண்டும் அவரின் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்.

இது குறித்து நீடாமங்கலம் பழக்கடைக்காரர் ரத்தினவேலுவிடம் பேசினோம். ``நான் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவன். என் கடைக்கு எதிரே அமைந்துள்ள முச்சந்தி மாரியம்மன் அருள் ஆணையின் பேரில், எனது மனதில் இறைவன் வழியாக வந்த கருத்தை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன் .

முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவது இறைவன் அருள். இதை யாரும் தடுக்க முடியாது. என்னிடம் அதிகாரிகள், `தங்களுக்கு ஏதும் கோரிக்கை உள்ளதா?’ என்று கேட்டபோது, `நான் எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்றுதான் சொன்னேன். சாதாரண தொண்டனை மதித்த முதல்வரின் பெருந்தன்மை என்னை சிலிர்க்கவைத்தத’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/you-re-the-chief-minister-for-the-next-5-years-says-fruit-shopkeeper-to-tamil-nadu-cm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக