Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

முதுமலை: `மைசூருக்கு கடத்தப்படும் சந்தன மரங்கள்!' - கர்நாடக கும்பல் கைவரிசை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பல்வேறு சாதக பாதகங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வரும் அதே வேளையில் சூழலியல் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நல்வாய்ப்பு அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

wild crime

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரியில் பொது முடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள், வாகன  போக்குவரத்து, உள்ளூர் மக்களின் நடமாட்டம் என இயல்புநிலை முடங்கியுள்ளதால், காட்டுயிர்கள் செழிப்படைந்து வருகின்றன. அதே சமயம்  இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டிக் கடத்துவது போன்ற வனக் குற்றங்களும் அதிகரித்துள்ளன.

கடந்த மாதம் 5 -ம் தேதி, முதுமலை வெளி மண்டல பகுதியான சிறியூர் வனத்தில் சந்தன மரத்தின்  அடிப்பகுதி கட்டைகளை தோண்டி எடுத்து, சிலர் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு  பொக்காபுரம் கிராமத்தைச்   சேர்ந்த முகமது அலி மற்றும்  சிறியூர் கிராமத்தைச்  சேர்ந்த சிவலிங்கன் இருவரிடமும் சந்தன மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்து  வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்தனர்.

wild crime

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் மசினகுடி வனத்தில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது  வனத்துறையினரைக் கண்ட நான்கு பேர் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை விரட்டிச்  சென்ற  வனத்துறையினர் இருவரைப் பிடித்து 27 கிலோ சந்தன மரத்துண்டுகளைப் பறிமுதல் செய்து அவர்களைக் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மசினகுடியைச் சேர்ந்த மகேஷ்குமார், 32, கேத்தன், 48, என்பது தெரியவந்தது .

தப்பி ஓடிய கர்நாடக மாநிலம்  குண்டல்பேட் பகுதியைச்  சேர்ந்த கரியன் என்பவரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும்  சிலரை தேடி வருகின்றனர்.

wild crime

இது குறித்து  முதுமலை வனத்துறையினர் கூறுகையில், ``சந்தன மரக்கடத்தலில் கர்நாடக வனக்கொள்ளை  கும்பல் ஈடுபட்டிருக்கலாம். இவர்கள் மைசூருக்கு சந்தன மரத்தை கடத்தி இருக்கலாம்  என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்புடையவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம். கர்நாடக  வனத்துறையின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/environment/sandal-wood-smuggling-in-mudumalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக