Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

"அப்ப `மாஸ்க் பரோட்டா'... இப்ப `கைலாசா'வில் ஹோட்டல்!" - `கலகல' ஹோட்டல் அதிபர்

எப்படி வித விதமா ஐடியா புடிக்கிறீங்க என ஹோட்டல் அதிபர் டெம்பிள் சிட்டி குமாரை தொடர்பு கொண்டோம்.

"எல்லாமே மக்களைக் கவர்வதற்காகதான். சுவாமி நித்யானந்தா அவர்கள் எப்படி மக்களை கவர்ந்திருக்கிறாரோ அந்த கவர்ந்திழுக்கும் சக்தி எங்கள் நிறுவனத்துக்கும் உண்டு. ஏற்கனவே மாஸ்க் பரோட்டாவை அறிமுகப்படுத்தி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக கைலாசாவிலும் ஹோட்டல் துவங்கலாம் என்கிற எண்ணம் தோன்றியது."

மாஸ்க் பரோட்டா

கைலாசாவில் ஏன் ஹோட்டல் திறக்கலாம்னு யோசிச்சீங்க?

"ஒரு நாடு உருவாகிறது என்றால் வர்த்தகம் முக்கியம். வர்த்தகத்தைச் செழிக்க நாணயம் வெளியிட்டார்கள் என்பதை ஊடகம் வாயிலாக தெரிந்து கொண்டேன். ஒரு நாட்டுக்கு அடிப்படை தேவை என்பது உணவு. ஹோட்டல்களைத் திறந்து வர்த்தகத்தைச் செழிக்க வைக்கலாம். எனவே கைலாசாவில் அனுமதி கோரி கடிதம் எழுதினேன்."

கைலாசா உருவாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?

டெம்பிள் சிட்டி குமார்

"எல்லா மக்களைப் போலவேதான் நானும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாடு உருவாக்கப்போகிறேன் என அவர் சொன்னபோது சிலர் நம்பிக்கையாக பார்த்தார்கள். சிலர் ஏளனமாக பார்த்தார்கள். தொழிலதிபர் என்கிற முறையில் அதனை நான் ஒரு வர்த்தகமாக பார்க்க அரம்பித்தேன்.

இந்தக் கடிதத்திற்கு பதில் கிடைப்பதன் மூலமாக, 'கைலாசா உண்மையிலேயே உருவாகிறதா...' என்கிற 150 கோடி மக்களின் கேள்விக்கும் பதில் கிடைக்கப்போவதாகவே பார்க்கிறேன்."

இந்தக் கடிதம் அவருக்குப் போய் சேரும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?

நித்யானந்தா

"சுவாமி நித்யானந்தா, தன் அறிவிப்புகள் எல்லாம் மக்களைப் போய் சேரும் என்கிற நம்பிக்கையில்தானே வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் எல்லாம் நம்மை வந்து சேர்ந்ததுதானே! அது போல இதுவும் அவருக்குப் போய் சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

“So that me, through this me, talking to me” என நித்தியின் வாக்கு கேட்டது போல ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு!


source https://www.vikatan.com/oddities/humoursatire/madurai-hotel-owner-talks-about-his-letter-to-nithyananda

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக