Ad

புதன், 16 செப்டம்பர், 2020

சசிகலா ரிலீஸ்: `ஒரு வருடமாக எந்த பதிலும் சரியாக கிடைக்கல!' - பெங்களூரு நரசிம்மமூர்த்தி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 1991-96 ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனையும், ஜெயலலிதாவிற்கு 100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நரசிம்மமூர்த்தி

ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017 பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அடுத்த வருடம் தண்டனைக் காலம் நிறைவடையும் நிலையில் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்பது தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ’சசிகலா எப்போது விடுதலை ஆவார்?’ என பெங்களூரு சிறைத்துறையிடம் தகவல் கேட்டிருந்தார். அதற்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத் துறை கண்காணிப்பாளர் லதா அளித்த தகவலில், ``உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை கைதி எண் 9234 கொண்ட சசிகலா 27.1.2021ம் தேதி விடுதலை ஆகலாம். அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் 27.2.2022 விடுதலை ஆகலாம்.

பதில் கடிதம்

அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தியிடம் பேசினோம்,

''நான் பல ஆண்டுகளாக பலத் துறையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பல கேள்விகளை கேட்டு பதில் பெற்றிருக்கிறேன். பெங்களூரு சிறைத் துறையிடமும் பல கேள்விகளுக்கு சரியான நேரத்தில் பதில்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வருடமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத் துறையிடமிருந்து எந்த ஒரு பதிலும் சரியாக கிடைக்கவில்லை.

சசிகலா

அதையடுத்து கடந்த 4.8.2020-ம் தேதி பெங்களூரு சிறைத்துறை மீது கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் தலைமை ஆணையர், பெங்களூரு சிறைத்துறை ஆணணையர், கண்காணிப்பாளர் என பலருக்கும் புகார் தெரிவித்ததோடு சசிகலா எப்போது விடுதலையாவார் என்ற தகவலும் கேட்டிருந்தேன். அதையடுத்தே இப்படி ஒரு தகவல் கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/narasimmamoorthy-on-rti-regarding-sasikala-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக