Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

அஜித்தின் அடுத்த படம்... இயக்குநர் யார், கதை என்ன?! #VikatanExclusive

'மாஸ்டர்' படத்துக்கு அடுத்து விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், 'வலிமை'க்கு அடுத்து அஜித்தின் அடுத்தப்படம் என்ன என்பதுதான் கோலிவிட்டில் பெரிய கேள்வி. அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் அந்த அப்டேட் விகடனுக்குக் கிடைத்திருக்கிறது.

வலிமை அப்டேட்?!

Valimai

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் ஐதரபாத்தில் தொடங்கியது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'வலிமை'யின் ஷூட்டிங் பாதி முடிந்தநிலையில் கொரோனா பிரச்னையால் ஷூட்டிங் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இப்போது ஷூட்டிங் நடந்தலாம் என அனுமதி கொடுக்கப்பட்டாலும், இந்த ஆண்டு இறுதியில்தான் 'வலிமை' ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருக்கிறது. இன்னும் 50-60 நாட்கள் 'வலிமை' படத்தின் ஷூட்டிங் நடக்கவேண்டும். இதில் அஜித் நடிக்கவேண்டிய நாள்கள் 30 நாள்களுக்குள் இருக்கும் என்கிறார்கள்.

ஜனவரியில் ஷூட்டிங் வர அஜித் ஓகே சொல்லியிருப்பதால் ஜனவரி முழுவதும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன. கொரானாவின் தீவிரம் குறைந்து எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் ஜனவரி- பிப்ரவரியில் வலிமை ஷுட்டிங்கை முழுவதுமாக முடித்துவிடுவார் ஹெச்.வினோத். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் அடுத்தப் படத்துக்குப்போவதுதான் அஜித்தின் தற்போதைய பிளான்.

அடுத்தப்பட இயக்குநர் யார்?!

'சூரரைப் போற்று' படத்தை இயக்கி முடித்திருக்கும் சுதா கொங்கரா கடந்த பிப்ரவரி மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிப்புக்காக விஜய்யை சந்தித்து கதை சொன்னார். கதை மிகவும் பிடித்திருக்க உடனே ஓகே சொல்லியிருக்கிறார் விஜய். 'மாஸ்டர்' ஏப்ரல் 2020-ல் தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகயிருந்த நிலையில், 2021 பொங்கலுக்கு விஜய்யின் அடுத்தப்படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்பதுதான் சன் பிக்சர்ஸின் திட்டம்.

வலிமை

ஆனால், சுதா கொங்கரா ப்ரீ ப்ரொடக்‌ஷனுக்கு குறைந்தது மூன்று - நான்கு மாதங்களாவது வேண்டும் என சொன்னதோடு, படத்தில் பல கிராஃபிக்ஸ் காட்சிகளும் இருப்பதால் பொங்கலுக்குள் படத்தை முடிப்பது கஷ்டம் என விஜய்யிடம் பர்சனலாகவே தன் நிலைமையை விளக்கிச்சொல்லி வெளியேவந்திருக்கிறார். சூர்யா படத்தை முடித்து, விஜய்க்கு கதை சொன்னவருக்கு அஜித்திடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் அப்பாய்ன்மென்ட் கிடைத்திருக்கிறது. அஜித்திடம் கதை சொல்ல, அவருக்கும் பிடித்துப்போக ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. கதையை இன்னும் வலிமையாக்கும் வேலைகளில் சுதா இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Also Read: `விபரீத முடிவு... படத்தைக் கெடுத்துட்டே!'- பாண்டியராஜனும் `ஆண் பாவம்'மும் ஜெயித்த கதை தெரியுமா?

கதை என்ன?!

சுதா கொங்கரா

விஜய்க்கு சொன்ன அதே கதை இது இல்லை என்கிறார்கள். சுதா அஜித்துக்கு சொல்லியிருக்கும் கதை 'மிஷன் இம்பாசிபிள்' ஸ்டைலில் பரபர ஆகஷன் படமாக இருக்குமாம். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுதா, மாதவன், ரித்திகா சிங் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். அடுத்து அவர் இயக்கியிருக்கும் 'சூரரைப் போற்று' படம் அக்டோபர் 30-ம் தேதி அமேஸான் ப்ரைமில் ரிலீஸாகயிருக்கிறது. 'நேர்கொண்ட பார்வை' படம் மூலம் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அஜித், அடுத்து தன் படத்தை ஒரு பெண் இயக்குநரிடம் கொடுக்கயிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் ஒரு மாஸ் இயக்குநரை இயக்கும் முதல் பெண் இயக்குநராக இருக்கிறார் சுதா.

கொரோனா, படப்பிடிப்புகள் பழையபடி நடக்கவழிவிட்டால் 'வலிமை' ஷூட்டிங்கை ஜனவரியில் முடித்துவிட்டு புதுப்படத்துக்கு வந்துவிடுவார் அஜித். 'வலிமை' 2021- மே ரிலீஸூக்கு திட்டமிடப்பட்டுவருகிறது.


source https://cinema.vikatan.com/tamil-cinema/who-is-going-to-direct-ajiths-next-movie-after-valimai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக