Ad

திங்கள், 28 ஜூன், 2021

Tamil News Today: `40 ஆயிரத்துக்கு கீழ் பதிவான தினசரி பாதிப்பு!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 37,566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 102 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,03,16,897என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 907. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,97,637-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்/ மூன்றாம் அலை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,93,66,601-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 5,52,659 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 56,994 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-29-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக