தி.மு.க அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாள்களும், இறுதி நாளான 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலினின் பதிலுரையும் இடம்பெற்றது. அதன்பின் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தனது பதிலுரையில்தான் மேற்கண்டவாறு முதல்வர் தெரிவித்தார். அப்படியென்றால் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கப்போகிறது? என நிதித்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.
“தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைக் கொண்டுதான் ஆளுநர் உரை அமைந்தது. பட்ஜெட்டும் அதன் அடிப்படையில் தான் அமையப்போகிறது. அதில் இல்லாத சில முக்கியமான விஷயங்களை மட்டும் முதல்வர் அவ்வப்போது அறிவிப்பு செய்வார். இதற்காக தேர்தல் அறிக்கையின் உறுதிமொழிகள் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் சிறிய துண்டுதான் ஆளுநர் உரையில் இடம் பெற்றது. இன்னும் கொஞ்சம் தகவல்கள் பட்ஜெட்டில் இடம்பெறும். இன்னும் சில உறுதிமொழிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர்களின் பதிலுரையில் இடம்பிடிக்கும். முக்கியமானவை மட்டும் முதல்வர் அறிவிக்கையில் வரும். இதன்படி பார்த்தால், பட்ஜெட்டில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள தகவல்கள் சில உள்ளன.
* விவசாயிகள் வேளாண் பொருட்களை உரிய விலையில் விற்பனை செய்திட ஊரகப் பகுதிகளில் விற்பனை சந்தைகள் அமைத்தல்
* வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, பருப்பு வகைகள், மிளகாய், சிறு தானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வாய்ப்பு
* சிறு, குறு விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க 10,000 ரூபாய் வரை மானியம்
* வன விலங்குகளால் உயிரிழக்கும் நபர்களுக்கு இழப்பீட்டுத்தொகை 5 லட்சமாக உயர்த்துதல்
* தனி நபர் விளை நிலங்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு.
* பொள்ளாச்சி, பட்டுக்கோட்டையில் தென்னைப் பொருள் உற்பத்தி வளாகம்
* டெல்டா கால்வாய்கள் தூர்வாருதல்
* நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 2,500 ரூபாய் உயர்த்துதல்
* கரும்புக்கான ஆதார விலை 4,000 ரூபாயாக உயர்த்துதல்
* அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்
* தூத்துக்குடி, வேலூர், கரூர், தருமபுரியில் பேரீட்சை வளர்க்க சிறப்பு நிதியுதவி
* 2000 கோடியில் 200 தடுப்பணைகள் அமைத்தல்
* 3000 கோடியில் கொள்ளிடம் ஆற்றில் பாலத்துடன் கூடிய 5 கதவணைகள்
* சென்னை நகரின் ஆறுகளின் பாதுகாப்புக்கு 5,000 கோடி ஒதுக்கீடு
* மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்
* புதிய மீன்வளக் கல்லூரிகள், கடல்சார் கல்லூரி உருவாக்குதல்
* மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 8000 ரூபாய், மழை வெள்ள நிவாரணம் 6000 ரூபாயாக உயர்த்துதல்
* டீசல் மானியம் உயர்வு
* விசைத்தறிக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசம்
* அரசுத்துறையில் தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம்
* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் திட்டம்
* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கைகனிணி, நிறுவனங்களில் வைஃபை வசதி
* அரசுத்துறையில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்புதல், 2 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல்
* கொரோனாவில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 15,000 கோடி ரூபாய் கடன் வசதி
* மாதமொரு முறை மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு
* மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம்
* முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்துதல்
* ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்க 1000 ரூபாய் மானியம்
* கடலோர மாவட்டங்களில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்
* பழனி - கொடைக்கானலில் கேபிள்கார் வசதி
* 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக்கப்படும்
போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவும், இதற்கான நிதிகளை ஒதுக்கவும் வாய்ப்புள்ளது. நிதி ஆதாரங்களைக் கண்டறியக்கூடிய வகையில் அதற்கான செயல்திட்டங்களும் தயார் செய்யப்பட்டுவிட்டன. மேலும், முக்கியமாக முழுமையான வரியில்லா பட்ஜெட்டாகவே தி.மு.க அரசின் முதல் பட்ஜெட் இருக்கும்” என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-are-schemes-that-have-chance-to-be-announced-in-budget-session
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக