Ad

புதன், 21 ஜூலை, 2021

Tamil News Today: இந்தியாவில் ஒரே நாளில் 41,383 பேருக்கு தொற்று; 507 மரணங்கள்! - கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 41,383 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,12,57,720 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 507. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,18,987 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,04,29,339-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,09,394 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 38,652 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 41,78,51,151 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-22-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக