Ad

புதன், 30 ஜூன், 2021

கோவையில் அதிர்ச்சி: கொரோனா வைரஸுக்கு 5 மாத குழந்தை உயிரிழப்பு!

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் இப்போதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கோவையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு 500-க்கு கீழ்தான் உள்ளது.

கொரோனா வைரஸ்

Also Read: திருப்பூர்: பிரசவத்துக்குச் சென்ற பெண்ணுக்கு கொரோனா! - அச்சத்தில் பழங்குடி கிராமம்

கோவை மாவட்டத்தில் மட்டும் பாதிப்பு 500-க்கு அதிகமாக உள்ளது. நேற்று கூட புதிதாக 514 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை

இதற்காக மசானிக் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை, கடந்த 23-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், குழந்தையின் நிலை தொடர்ந்து மோசமாகவே இருந்துள்ளது. இதையடுத்து 27-ம் தேதி இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது என்று கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

குழந்தை உயிரிழப்பு (கோப்புப் படம்)

இந்தக் குழந்தைக்கு வேறு இணை நோய்கள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/tamilnadu/5-months-old-baby-died-for-covid-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக