பெருந்தொற்றுக் காலம் உருவாக்கியுள்ள நிலையற்ற தன்மை பலருக்கும் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவள் விகடன் மற்றும் தமிழ்நாடு தொழில்முனைவோர் நலச்சங்கம் (வீவா) இணைந்து நடத்தும் ஆரோக்கிய ஹெர்பல் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 3 முதல் 4.30 மணி வரை பயிற்சி நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 27-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய வீவாவின் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணா, ``எங்கள் அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது. இந்த அமைப்பில் தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 13,800 பேர் உறுப்பினர்களாகப் பதிவுசெய்துள்ளனர். கடந்த 13 ஆண்டுகளில் 73,000 பேருக்கு பயிற்சியளித்துள்ளோம்.
கல்லூரி மாணவிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்தவர்கள், கல்வியறிவு பெறாதவர்கள் போன்றோருக்கு தொழில் தொடங்குவதற்கான பயிற்சி முதல் பதிவு நடைமுறைகள், வங்கிக்கடன், மானியம் என அனைத்து வகையான ஆதரவையும் அளித்து வருகிறோம்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பது தொழில் தொடங்குவதற்கான பாசிட்டிவ் எண்ணத்தை உருவாக்கும். மேலும் ஹெர்பல் பொருள்கள் தயாரிப்பது, மூலப்பொருள்கள் வாங்குவது, தொழில் தொடங்குவது, மார்க்கெட்டிங் வழிமுறைகள், எவ்வளவு வருமானம் ஈட்டலாம் என்பன உள்ளிட்ட அனைத்தையும் பற்றிய தெளிவு கிடைக்கும்" என்றார்.
தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் திட்டமிடல் மற்றும் மார்க்கெட்டிங் துறை இயக்குநர் பி.உதயகுமார், ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் அலெக்ஸ் மற்றும் ஆரோக்கிய ஹெர்பல் பொருள்கள் தயாரிப்பைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர் லாவண்யா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
கட்டணமில்லா இந்த நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/business/women/aval-vikatan-webinar-on-herbal-beauty-products-manufacturing-business
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக