ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Also Read: கோவை:`கஞ்சா கடத்திய காதல் ஜோடி; கைதுசெய்த போலீஸ்!'
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தூத்துக்குடி காவல்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்செந்தூரிலிருந்து கீழக்கரைக்கு வந்த பொலிரோ பிக்கப் காரை சோதனை செய்தனர்.
காருக்குள் தடை செய்யப்பட்ட சுறா பீலிகள் (இறக்கைகள்), ஏலக்காய் மூட்டைகள் இருந்ததைக் கண்டு பிடித்தனர். இதையடுத்து டிரைவர் சதாம் உசேனிடம் விசாரணை செய்ததில், கீழக்கரையிலுள்ள காசிம் முகம்மது என்பவரின் குடோனுக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
முகம்மது காசிமின் குடோனை காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
கடத்தலுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ சுறா இறக்கைகள் , 55 கிலோ கடல் அட்டைகள், 250 கிலோ ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இப்பொருள்களின் மதிப்பு ரூ.17 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read: கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பால் ஆபத்தில் சுறா மீன்கள்... ஏன்?
இந்த வழக்கில் காசிம் முகமது, முகமதுமீரா சாகிப், சகாபுதீன் சாகிப் ஆகிய 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கடத்துபவர்கள் தங்கள் தொழிலைத் தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/environment/ramanathapuram-police-arrested-the-group-that-smuggled-shark-wings-and-sea-cucumbers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக