Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

Tamil News Today: 3 வகை மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு! - இன்று காலை முதல் அமலுக்கு வந்தது!

அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் ஊரடங்கு...!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், கடந்த மே மாதம் 24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று பரவலின் வேகம் குறைந்த தொடங்கியதும் ஒவ்வொரு வாரமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில், 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. வகை 1-ல் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களும், வகை 2-ல் அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களும், வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் வகை 3-ல் உள்ள மாவட்டங்களில், வழிபாட்டு தளங்கள் திறப்பு, துணிக்கடைகள், நகைகடைகல் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. வகை இரண்டில் கூடுதல் தளர்வுகளுடனும், வகை மூன்று கட்டுப்பாடுகளுடனும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் கூடுதல் கவனத்துடன் முககவசம் அணிந்து, அவசியத்துக்கு மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு பயணிகள் சமுக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தினார்.

Also Read: தமிழ்நாடு ஊரடங்கு:`ஜூலை-5 வரை நீட்டிப்பு; 3 வகை மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்னென்ன?'



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-28-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக